உடலில் படியும் அதிகப்படியான கெட்ட கொழுப்பால் எடை அதிகரிக்கிறது.உடல் எடை அதிகமாக இருந்தால் சர்க்கரை,மாரடைப்பு,பக்கவாதம்,மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும்.எனவே உங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க பார்லி அரிசியில் கஞ்சி செய்து குடிங்க.
தேவையான பொருட்கள்:-
1)பார்லி அரிசி – 100 கிராம் கிராம்
2)கரு மிளகு – ஐந்து
3)பூண்டு – 5-7 பற்கள்
4)சீரகம் – ஒரு தேக்கரண்டி
5)கேரட் – ஒன்று
6)பீன்ஸ் – நான்கு
7)பெரிய வெங்காயம் – ஒன்று
8)இஞ்சி – ஒரு துண்டு
9)வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
10)உப்பு – தேவையான அளவு
11)தண்ணீர் – ஒரு கப்
12)கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை விளக்கம்:-
முதலில் 100 கிராம் பார்லி அரிசியை வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதனை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அறையுங்கள்.
பிறகு கேரட்,பீன்ஸ்,பெரிய வெங்காயம்,இஞ்சி மற்றும் பூண்டு பற்களை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு அடுப்பில் குக்கர் வைத்து ஒரு தேக்கரண்டி வெண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு மிளகு,சீரகம் போட்டு பொரியவிடுங்கள்.அதன் பிறகு நறுக்கிய வெங்காயம்,இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கி எடுக்கவும்.
பின்னர் பொடியாக நறுக்கிய கேரட்,பீன்ஸ் சேர்த்து வதக்க வேண்டும்.அடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.காய்கறி நன்றாக வதங்கி வந்த பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க வைக்க வேண்டும்.
அதன் பிறகு அரைத்த பார்லி அரிசியை கொட்டி கைவிடாமல் கிளற வேண்டும்.தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.பிறகு ஒரு விசில் விட்டு இறக்கி கொள்ளுங்கள்.
பின்னர் வாசனைக்காக கொத்தமல்லி தழை தூவி சாப்பிடலாம்.இந்த பார்லி கஞ்சியை தினமும் பருகி வந்தால் உங்கள் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.