ரத்தத்தின் சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இதோ அதற்கான டிப்ஸ்!

ரத்தத்தின் சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இதோ அதற்கான டிப்ஸ்!

சர்க்கரை நோயின் அளவை கட்டுக்குள் வைக்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் அதனை இந்த பதிவின் மூலமாக காணலாம்.

தற்போதுள்ள காலகட்டத்தில் இளம் வயதில் இருந்து சர்க்கரை நோய் ஏற்படுகிறது இதற்கான காரணம் நம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் சரியான முறையில் மற்றும் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வதில்லை இதன் விளைவாக நம் உடலுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது அதில் மிகவும் முக்கியமானது சர்க்கரை நோயாகும் இதனை எவ்வாறு சரி செய்து கொள்ளலாம் அதன் செய்முறைகள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம்.

வெந்தயம்:வெந்தயத்தில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. கல்லீரலை சுறுசுறுப்பாகுகிறது பித்தத்தை குறைக்கும். இரண்டு டீஸ்பூன் வெந்தயம் மற்றும் ஒரு கப் நீர் ஆகிய இரண்டையும் சேர்த்து இரவு உறங்குவதற்கு முன் ஊறவைத்து மறுநாள் காலையில் இதனை வடிகட்டி குடித்து வருவதன் மூலமாக சர்க்கரையின் அளவு குறைக்க உதவுகிறது.

நெல்லிக்காய்:நெல்லிக்காயில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நம் சாப்பிடும் உணவுகள் ரத்தத்தில் கலக்கும் இன்சுலினை சுரக்க நெல்லிக்காய் உதவுகிறது. நெல்லிக்காயின் அதிகப்படியான வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் மற்றும் எந்தவித பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் பாதுகாத்துக் கொள்கிறது. அதனால் தினமும் ஒன்று அல்லது இரண்டு நெல்லிக்காய்களின் சாப்பிடுவதன் மூலமாக நம் உடலுக்கு பலவிதமான நன்மைகள் ஏற்படுகிறது.

துளசி:துளசியில் உள்ள சத்துக்கள் நம் உடலுக்கு பல விதமான நன்மைகளை தரக்கூடியதாக உள்ளது. இவை சித்த மருத்துவத்தில் முதன்மையாக உள்ளது. இதில் உள்ள மூலப்பொருட்கள் இருமல், சளி ஆகியவற்றை குணப்படுத்த உதவும். துளசியில் உள்ள துவர்ப்பு சர்க்கரை நோயை குறைக்க சிறந்த மருந்தாகும் இது காலை கணையத்தில் உள்ள பீட்டா செல்களின் செயல்பாட்டை அதிகரிக்கும் மேலும் இன்சுலின் சுரப்பியை சீராக்கும்.

 

Leave a Comment