இன்று பெரும்பாலானோர் இரத்த அழுத்தப் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர்.இந்த பாதிப்பு ஏற்பட்டால் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இன்று பலரும் சோம்பல் வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இதன் காரணமாக பல நோய் பாதிப்புகள் நம்மை அசால்ட்டாக நெருங்குகிறது.இதில் இருந்து மீள நம் பாரம்பரிய மருத்துவத்தை நாம் பின்பற்றலாம்.
பிபி ஏற்பட காரணம்:-
1.இதய பிரச்சனை
2.சீரற்ற இரத்த ஓட்டம்
3.உடல் பருமனை
4.இரத்த குழாய் அடைப்பு
5.நீரிழிவு நோய்
6.இரத்த இழப்பு
பிபி அறிகுறிகள்:-
1.தலைவலி
2.திடீர் மயக்கம்
3.மார்பு வலி
4.சுவாசப் பிரச்சனை
5.தலைச்சுற்றல்
6.சீரற்ற இதய துடிப்பு
7.கண் பார்வை குறைபாடு
தேவையான பொருட்கள்:-
**சிவப்பு கொய்யா பழம் – இரண்டு
**தேன் – ஒரு தேக்கரண்டி
**தண்ணீர் – ஒரு டம்ளர்
பயன்படுத்தும் முறை:-
1)இரண்டு அல்லது மூன்று சிவப்பு கொய்யா பழத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
2)பிறகு இந்த கொய்யா ஜூஸை ஒரு டம்ளருக்கு ஊற்றி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகினால் உடனடியாக பிபி கட்டுப்படும்.அதேபோல் கொய்யா பழத்தை பொடியாக நறுக்கி சாலட் போன்று சாப்பிட்டு வந்தாலும் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
தேவையான பொருட்கள்:-
**கொய்யா இலை – இரண்டு
**தண்ணீர் – ஒரு டம்ளர்
பயன்படுத்தும் முறை:-
1)இரண்டு கொய்யா இலையை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
2)பிறகு இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி பருகி வந்தால் உயர் இரத்த அழுத்தம்(BP) கட்டுக்குள் இருக்கும்.அதேபோல் கொய்யா இலையை காயவைத்து பொடியாக்கி தேநீர் செய்து பருகி வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.அடிக்கடி கொய்யா பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் பாதிப்புகள் அண்டாமல் இருக்கும்.