வீண் செலவுகளால் பண விரயம் ஆவதைத் தடுக்க வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!!

0
73
#image_title

வீண் செலவுகளால் பண விரயம் ஆவதைத் தடுக்க வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!!

*வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு என 2 நாட்களுக்கு பைரவர் சன்னதிக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர நிச்சயம் வீண் விரயங்கள் குறையும்.

*தினமும் காலையில் எழுந்ததும் வீட்டிற்கு வரும் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட் உணவாக வைத்து வருவதன் மூலம் தேவையற்ற செலவுகள் குறையும்.

*வெள்ளிக்கிழமை அன்று தண்ணீரில் சிறிது மஞ்சள் தூள், பச்சைக் கற்பூரம், கல் உப்பு கலந்து அதை வீட்டில் உள்ள அனைத்து மூலைகளிலும் தெளித்து வருவதன் மூலம் வீண் செலவுகள் குறையும்.

*பீரோவில் உள்ள பணப் பெட்டி, பண டப்பா அல்லது பணப் பை என எதுவாக இருந்தாலும் சரி அதை ஒரு பச்சை துணிக்கு மேல் வைத்து செவ்வாய், வெள்ளி அன்று பூ வைத்து அதற்கும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதன் மூலம் வீட்டில் ஏற்படும் வீண் விரயங்கள் குறையும்.

*செவ்வாய், வெள்ளி சாம்பிராணி புகை காட்டும் போது கண்டிப்பாக அதில் பிரிஞ்சி இலை மற்றும் பட்டைத் தூள் சேர்த்து போட வீண் விரயங்கள் குறையும்.

*வீட்டு பூஜை அறையில் ஒரு உண்டியல் வைத்து தினமும் சில்லறை காசுகளை போட்டு வருவதால் சேமிக்கும் பழக்கம் உண்டாகும். இதனால் வீண் செலவு தவிர்க்கப்படும்.

*வீட்டில் குபேர சிலை அல்லது புகைப்படம் வைத்து வழிபட்டால் பண விரயம், பண கஷ்டம் நீங்கி செல்வம் நாளுக்கு நாள் பெருகும்.

*சம்பளம் வாங்கியதும் முதலில் உப்பு கல்லில் ஒரு நாள் முழுவதும் வைத்துவிட்டு பின்னர் எடுக்கவும். இவ்வாறு செய்வதால் தேவையற்ற செல்வுகள் ஏற்படாது.