கூடிய விரைவில் சொந்த வீடு கனவு நனவாக வேண்டுமா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!

Photo of author

By Divya

கூடிய விரைவில் சொந்த வீடு கனவு நனவாக வேண்டுமா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!

நம்மில் பெரும்பாலானோர் நீண்ட வருடங்களாக வாடகை வீட்டில் வசிக்கிறோம். சீக்கிரம் சொந்த வீடு கனவு நனவாக வேண்டுமென்று நினைப்பவர்களாக இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்யவும். இதனால் நிச்சயம் நல்ல பலன் உண்டாகும்.

உங்களின் சொந்த வீடு கனவு பலிக்க எளிய பரிகாரம்:-

தேவையான பொருட்கள்:-

*துவரம் பருப்பு

*அகல் விளக்கு

*திரி

*தட்டு

*நெய்

*வெல்லம்

பரிகாரம் செய்யும் முறை…

ஒவ்வொரு மாதமும் செவ்வாய்க் கிழமை தான் வீட்டு வாடகை கொடுக்க வேண்டும். இந்த வீடு வாடகை கொடுப்பதற்கு முந்தின நாள் கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

திங்கட்கிழமை அன்று வாடகைப் பணத்தை ஒரு சிறிய கவரில் போட்டு துவரம் பருப்பு டப்பாவில் அந்த கவரை வைக்கவும். மறுநாள் செவ்வாய் கிழமை அன்று காலை 6 மணி முதல் மணி வரை அல்லது மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் வீட்டு வாடகை கொடுக்கவும்.

வீட்டு வாடகை கொடுத்த பிறகு அன்று முருகர் கோயிலுக்கு சென்று அங்குள்ளவர்கள் 6 பேருக்கு துவரம் பருப்பு தானம் செய்து விடவும் (குறைந்தது ஒருவருக்கு கால் கிலோ என்ற விகிதத்தில் தானம் செய்யவும்).

முடிந்தவர்கள் அன்று மாலை 6 மணிக்கு வீட்டில் ஒரு சிறிய தட்டில் ஒரு கைப்பிடி அளவு துவரம் பருப்பு போட்டு ஒரு அகல் விளக்கில் சிறிது நெய் ஊற்றி சிவப்பு திரி போட்டு தீபம் ஏற்றவும்.

தீபம் ஏற்றிய பிறகு இரவு அந்த பருப்பை ஊற வைத்து மறுநாள் வெல்லம் கலந்து அதை பசுவிற்கு தானம் செய்து விட வேண்டும். இது மிக மிக மிக சிறந்த பலன் தரும்.

அப்படி முடியாதவர்கள் மொட்டை மாடியில் வைத்து பறவைகளுக்கு தானம் செய்து விடவும். இவ்வாறு செய்தால் விரைவில் உங்கள் சொந்த வீடு கனவு நனவாகும்.