அதிக வெப்பத்தால் உடல் சூடு அதிகரித்து பல பிரச்சனைகளால் அவதியடைந்து வருகின்றோம்.உடலில் அதிக வெப்பம் உருவானால் பித்தம் அதிகரிக்கும்.சருமப் பிரச்சனைகள்,நீர்க்கடுப்பு போன்ற பாதிப்புகள் உடல் வெப்பத்தால் ஏற்படுகிறது.
கோடை காலத்தில் உடல் சூட்டால் அம்மை பாதிப்பை பலரும் எதிர்கொள்கின்றனர்.எனவே கோடை சூடு தணிய இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்.
1)ஆயில் பாத்
வாரம் இருமுறை நல்லெண்ணெயை தலை முதல் பாதம் வரை அப்ளை செய்து நன்றாக ஊறிய பிறகு குளிக்க வேண்டும்.இப்படி செய்து வந்தால் உடல் சூடு முற்றிலும் தணியும்.
2)இளநீர் + பனங்கற்கண்டு
ஒரு இளநீரை வெட்டி அதன் தண்ணீரை கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு பனங்கற்கண்டு மிக்ஸ் செய்து குடித்தால் உடல் சூடு தணியும்.இளநீர் குடிப்பதால் உடல் வெப்பம் தணிந்து உடலுக்கு தேவையான குளிர்ச்சி கிடைக்கும்.
3)கற்றாழை ஜெல்
ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஏழு முறை அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
இந்த கற்றாழை துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்க வேண்டும்.இந்த ஜூஸை குடித்தால் உடல் சூடு தணியும்.
அதேபோல் வெட்டி வேரை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு நன்றாக ஊறவைத்து வடிகட்டி குடித்தால் உடல் சூடு தணியும்.வெந்தய நீர்,துளசி நீர்,புதினா நீர் போன்றவற்றை செய்து பருகினால் உடல் சூடு தணியும்.