இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை காரணமாக பல்வேறு உடல் நலக் கோளாறுகளை அனுபவித்து வருகின்றோம்.முன்பெல்லாம் மாரடைப்பு,மூட்டு வலி,சர்க்கரை வியாதி போன்றவை வயதானவர்களை மட்டும் பாதித்து வந்தது.
ஆனால் தற்பொழுது சிறியவர்கள்,இளம் வயதினர் இந்த பாதிப்புகளை அதிகமாக சந்திக்கின்றனர்.அதேபோல் உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தல் பிரச்சனையை பலரும் எதிர்கொண்டு வருகின்றனர்.உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால் மூட்டு வலி,சிறுநீரக பிரச்சனை,கணுக்கால் வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
யூரிக் அமிலம் அதிகரித்தால் கீல்வாத பிரச்சனை ஏற்படும்.எனவே உடலில் யூரிக் அமில அளவை கட்டுப்பாட்டில் வைக்க உலர் விதைகள் மற்றும் உலர் பழங்களை உட்கொள்ளுங்கள்.
யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தும் உலர் விதைகள் மற்றும் உலர் பழங்கள்:
1)முந்திரி
இதில் மேக்னீசியம்,புரதம்,மோனோசாச்சுரேட்டட் போன்றவை நிறைந்திருக்கிறது.முந்திரி பருப்பை ஊறவைத்து சாப்பிட்டால் யூரிக் அமில அளவு கட்டுப்படும்.
2)பாதாம் பருப்பு
கால்சியம்,பொட்டாசியம்,புரதம்,வைட்டமின் ஏ,வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்திருக்கிறது.இந்த பாதாம் பருப்பை ஊறவைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் யூரிக் அமில அளவு குறையும்.பாதாம் பருப்பில் பால் செய்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
3)வால்நட்
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் நிறைந்திருக்கும் வால்நட்டை தினமும் சாப்பிட்டு வந்தால் யூரிக் அமில அளவு கட்டுப்படும்.
4)பேரிச்சை
இரும்புச்சத்து நிறைந்த பேரிச்சம் பழத்தை தினமும் இரண்டு ஈன்ற எண்ணிக்கையில் சாப்பிட்டு வந்தால் யூரிக் அமிலம் கட்டுப்படும்.இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
5)உலர் திராட்சை
இதில் உள்ள ஊட்டச்சத்து சிறுநீரகத்தில் உள்ள யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் யூரிக் அமில அளவு கட்டுப்படும்.
6)பிஸ்தா
தினமும் ஐந்து பிஸ்தாவை ஊறவைத்து சாப்பிட்டால் யூரிக் அமில அளவு கட்டுப்படும்.பிஸ்தாவில் இருக்கின்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.