பள்ளி பருவத்தில் அனைவரும் பேன் தொல்லையை அனுபவித்து வந்திருப்போம்.தலையில் பேன் உருவானால் நிச்சயம் தலை அரிப்பு ஏற்படும்.அதேபோல் பேன்கள் நம் இரத்தத்தை உரிவதால் உடல் சோர்வு ஏற்படுகிறது.இந்த பேன் தொல்லையை ஒழிக்க என்ன செய்தும் தீர்வு இல்லை என்று புலம்புபவர்கள் ஏராளம்.
இந்த பேன் தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள எண்ணையை பயன்படுத்துங்கள்.
வேப்ப எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
தேயிலை மர எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி வேப்ப எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு தேக்கரண்டி தேயிலை மர எண்ணெய் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை தலையில் தடவி வந்தால் பேன் தொல்லை முழுமையாக ஒழியும்.
பூண்டு பற்கள் – இரண்டு
தேங்காய் எண்ணெய் – மூன்று தேக்கரண்டி
முதலில் இரண்டு பூண்டு பற்களை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.அடுத்து தாளிப்பு கரண்டி ஒன்றில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
எண்ணெய் சிறிது சூடானதும் பூண்டு பற்களை பொடியாக நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இதை குறைந்த தீயில் காய்ச்சி அடுப்பை அணைக்க வேண்டும்.
இந்த பூண்டு எண்ணையை ஆறவைத்து வடித்து தலைக்கு தடவி வந்தால் பேன் தொல்லை முழுமையாக ஒழியும்.
வேப்பம் பூ – இரண்டு தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் – மூன்று தேக்கரண்டி
அடுப்பில் வாணலி வைத்து மூன்று தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி வேப்பம் பூ போட்டு காய்ச்ச வேண்டும்.
இந்த எண்ணையை ஆறவைத்து வடித்து தலைக்கு தடவி வந்தால் பேன் தொல்லை நிரந்தரமாக ஒழியும்.