நம்முடைய அறிவை கூர்மையாக்க வேண்டுமா? அப்போ வல்லாரையை இப்படி சாப்பிடுங்க!

Photo of author

By Rupa

நம்முடைய அறிவை கூர்மையாக்க வேண்டுமா? அப்போ வல்லாரையை இப்படி சாப்பிடுங்க!
பலரும் பல சமயங்களில் அனைத்து விஷயங்களையும் நியாபகம் வைத்துக் கொள்வதில்லை. ஏன் என்றால் ஒரு சிலருக்கு நியாபக மறதி இருக்கும். அல்லது அறிவுக் கூர்மை குறைவாக இருக்கலாம். இவர்கள் அனைவரும் நியாபக மறதியில் இருந்து விடுபட பல வகையான லேகியங்கள், மருந்துகள், மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறார்கள்.
எடுத்துக்காட்டாக நடிகர் விஜய் நடித்த நண்பன் திரைப்படத்தில் வரும் ஒரு கதாப்பாத்திரம் நியாபகம் அதிகமாக இருக்க வேண்டும் என்று லேகியம் சாப்பிடுவது போல காட்சி இருக்கும். அது போல லேகியமோ அல்லது மருந்து மாத்திரையோ சாப்பிட வேண்டியதில்லை. அதற்கு மாற்றாக நாம் வல்லாரை கீரை பயன்படுத்தலாம்.
வல்லாரை கீரை அறிவுக் கூர்மையாக்கும். நியாபக மறதி நோயை குணமாக்கும். நியாபகச் சக்தியை அதிகரிக்கும். இது போல பல வகையான நன்மைகள் கொண்ட இந்த வல்லாரை கீரையுடன் மேலும் ஒரு பொருளை சேர்த்து சாப்பிடுவதன் மூலமாக நம்முடைய நியாபக மறதி நோயை குணப்படுத்தலாம். மேலும் அறிவை கூர்மையாக்கலாம். அதை எவ்வாறு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* வல்லாரை கீரை
* நெய்
செய்முறை:
முதலில் வல்லாரைக் கீரையை கழுவி சுத்தம் செய்து வெயிலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் வெயிலில் உலர்த்திய வல்லாரை கீரையை மிக்சி ஜாரில் சேர்த்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.
இறுதியாக இந்த பொடியை சிறிதளவு எடுத்து நெய்யில் கலந்து சாப்பிட வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் நியாபக சக்தி அதிகரிக்கும். மேலும் அறிவும் கூர்மை அடையும்.