எப்பொழுதுமே இளமையாக இருக்க வேண்டுமா!!? அதுக்கு அஸ்வகந்தா பயன்படுத்துங்கள்!!!

Photo of author

By Sakthi

எப்பொழுதுமே இளமையாக இருக்க வேண்டுமா!!? அதுக்கு அஸ்வகந்தா பயன்படுத்துங்கள்!!!

முதுமையை தள்ளி நாம் எப்பொழுதும் இளமையாக இருக்க வேண்டும் என்றால் அஸ்வகந்தா பயன்படுத்தலாம். இந்த அஸ்வகந்தாவை சருமத்திற்கும் பயன்படுத்தலாம். வேறு என்ன நன்மைகள் தரும்? சருமத்திற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொள்வோம்.

அஸ்வகந்தா மூலிகை அசுவகந்தம், அசுவகந்தி, அமுக்குரவு, இருளிச் செவி, அசுவம் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இந்த அஸ்வகந்தா மூலிகையில் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் இருக்கின்றது. இதில் புரதச் சத்துக்கள், நார்ச்சத்துக்கள், இரும்புச் சத்துக்கள், வைட்டமின் இ ஆகிய சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றது. மேலும் மாங்கனீஸ், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல சத்துக்களும் இருக்கின்றது.

அஸ்வகந்தா மூலிகையின் நன்மைகள்…

* அஸ்வகந்தா மூலிகை நமக்கு ஆற்றலை அதிகரித்து, செறிவை மேம்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கின்றது. இதனால் நாம் நீண்டகாலம் இளமையுடன் இருக்க உதவுகின்றது.

* அஸ்வகந்தா பொடியை நாம் தண்ணீரில் கரைத்து பேஸ்டாக தயார் செய்து அந்த பேஸ்டை முகம் மற்றும் கழுத்தில் தடவினால் சருமம் பாதுகாக்கப்படுகின்றது.

* அஸ்வகந்தா மூலிகையை எடையை குறைக்க பயன்படுத்தலாம்.

* தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் அஸ்வகந்தா முதலிலேயே பயன்படுத்தலாம். இதனால் தூக்கமின்மை பிரச்சனை சரியாகும்.

* கை கால்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க அஸ்வகந்தா பயன்படுகின்றது.

* அஸ்வகந்தா மூலிகை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.

* வலியை குணப்படுத்த உதவி செய்கின்றது.

* அஸ்வகந்தா மூலிகையை பயன்படுத்தி தைராய்டு நோய்க்கு தீர்வு காணலாம்.