இலவசமாக M.Phil படிக்க வேண்டுமா? தமிழாராய்ச்சி நிறுவனம் முக்கிய அறிவிப்பு!

0
141

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் இலவசமாக எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் எம்ஃபில் படிப்பு படிப்பதற்காக மாணவர்களின் சேர்க்கை நடைபெற உள்ளதாகவும் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு முறையும் தமிழ் மொழியை வளர்ப்பதற்காக அதன் தொன்மையை பாதுகாக்கும் முயற்சியில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது தமிழக ஆராய்ச்சி நிறுவனம். அந்த வகையில் தமிழ் மொழியை கற்க பல பாடத்திட்டங்களையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தனது நிறுவனத்தில் தமிழ் ஆய்வில் நிறைஞர் பட்டம் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பாடுபடும் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட இந்த உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தமிழ் பல்கலைக்கழக ஏற்புடன் நிறைஞர் பட்டம்(M.Phil) ஆண்டுதோறும் சேர்க்கைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 2021- 22 ஆம் ஆண்டிற்கான ஆய்வியல் நிறைஞர் பட்ட படிப்புக்கு மாணவர்களின் சேர்க்கை நடைபெற உள்ளது. அதனால் தகுதியான மாணவர்கள் விண்ணப்பத்தை தகுதியான இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து தகுதியான முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு தகுதியாக மாணவர்கள் தங்களது முதுகலைப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களும் மற்றும் நுழைவுத் தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும் என்றும் இரண்டையும் சேர்த்து தான் பட்டியல் தயாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதேபோல் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அரசின் இனவாரி சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தப் படிப்பிற்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் தகுதியான உண்மையான சான்றிதழ்கள் மற்றும் இரண்டு நகல்களை எடுத்து வர வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதே போல் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் முகவரிக்கு வந்து சேரவேண்டும். நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள் நேரம் ஆகியவை குறித்து தகுதி உடைய விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும். அதேபோல் இவர்களுக்கு கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஉள்ளேன் ஐயா! முதல் ஆளாக கை தூக்கிய முக்கிய வீரர்!
Next articleஎப்பொழுதும் வீட்டில் தீபமானது எரிந்து கொண்டு இருக்கலாமா?