உள்ளேன் ஐயா! முதல் ஆளாக கை தூக்கிய முக்கிய வீரர்!

0
60

இந்திய அணியில் நோய்த்தொற்று காரணமாக, தற்சமயம் விக்கெட் கீப்பர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தினேஷ் கார்த்திக் ஒரு சூப்பர் ட்வீட்டை போட்டு இருக்கின்றார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தோல்விக்கு பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அங்கேயே தங்கி இருக்கிறார்கள்.5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தங்களை தயார் செய்து வருகிறார்கள்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிவுற்ற பின்னர் இங்கிலாந்து தொடருக்கு சுமார் ஒன்றரை மாதங்கள் இடைவெளி இருப்பதால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்களுக்கு பத்து தினங்கள் பயோ பபுள் விதிகளில் இருந்து விடுமுறை தரப்பட்டது. இங்கிலாந்தில் பல இடங்களை குடும்பத்துடன் சுற்றிப்பார்க்க அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில்தான் யூரோ கால்பந்து போட்டியை காண சென்ற இந்திய அணியின் வீரர் ரிஷப் பண்ட் அவர்களுக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

தற்சமயம் அவர் இங்கிலாந்து நாட்டில் இருக்கின்ற அவருடைய உறவினர்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு இருக்கின்றார். எதிர்வரும் 18ஆம் தேதி டூர்ஹான் செல்லும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியுடன் அவர் பயணம் செய்ய மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரம் இந்திய அணியின் தயானந்த காராணி என்பவருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து அவருக்கு நெருக்கமாக இருந்த பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் மற்றுமொரு விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா உட்பட 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்றும் அவர்கள் எதிர்வரும் 18ஆம் தேதி இந்திய அணியுடன் இணைய மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக, இங்கிலாந்து நாட்டின் சுற்றுப் பயணத்துக்கான இரு விக்கெட் கீப்பர் களும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட இயலுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கு பதிலாக இங்கிலாந்தில் வர்ணனையாளர்கள் குழுவில் இடம் பெற்றிருக்கின்ற தினேஷ் கார்த்திக் தான் விக்கெட் கீப்பராக செயல்பட தயார் என்று தன்னுடைய வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் மறைமுகமாக தன்னுடைய கிரிக்கெட் பேக்கை புகைப்படம் எடுத்து ஜஸ்ட் சேயிங் என்று ஹேஷ்டேக்வுடன் அதனை பதிவிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ரிஷப் பண்ட் மற்றும் விருத்திமான் சஹா உள்ளிட்டோர் முதல் போட்டிக்கு தயாராக சூழலில் கைகளில்தான் இருக்கிறது என்ற சூழல் ஏற்படும் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்திருந்த தினேஷ் கார்த்திக் நான் ரெடி பார் என்று சொல்லி இருக்கிறார். அவருடைய இந்த பதிவை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகிறார்கள். பலரும் இதை மிக சீரியஸாகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.