ஹேர் டை இல்லாமல் முடியை கருப்பாக மாற்ற வேண்டுமா? இந்த எண்ணெய் போதும்!

Photo of author

By Rupa

ஹேர் டை இல்லாமல் முடியை கருப்பாக மாற்ற வேண்டுமா? இந்த எண்ணெய் போதும்!
ஹேர் டை இல்லாமல் நம்முடைய தலைமுடியை எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் கருமையாக மாற்றிக் கொள்ளலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
பலரும் தங்களுடைய முடியை கருமையாக மாற்றுவதற்கு பலவிதமான ஹேர்டை பயன்படுத்தி வருகின்றனர். ஹேய்டை பயன்படுத்தும் பொழுது அப்பொழுதே உங்களுக்கு தேவையான கருமையான நிறம் கிடைக்கும். ஆனால் காலப்போக்கில் கருமையாக இருக்கும் முடி செம்பட்டை நிறத்திற்கு மாறும். எனவே ஹேர் டை இல்லாமல் இயற்கையாகவே முடியை எவ்வாறு கருப்பாக மாற்றுவது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* தேங்காய் எண்ணெய்
* நெல்லிக்காய் பொடி
செய்முறை…
முதலில் நாம் நெல்லிக்காய் பொடியை தயார் செய்ய வேண்டும். அதற்கு நெல்லிக்காய்களை அறுத்து அதை வெயிலில் காய வைக்க வேண்டும். நன்றாக காய்ந்த பின்னர் நெல்லிக்காயை மிக்சியில் போட்டு அரைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் காற்று புகாத ஒரு பாட்டில் எடுத்து அதில் தேங்காய் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் அரைத்து வைத்துள்ள நெல்லிக்காய் பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதை மூடி வைத்து விட்டு தொடர்ச்சியாக பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை நாம் தலைக்கு தேய்த்து சிறிது நேரம் கழிந்து குளித்து வந்தால் தலைமுடி கருமையாக மாறும்.