வெள்ளைத் துணிகள் பளிச் பளிச் என மின்ன வேண்டுமா?  இதோ ஒரே ஒரு பொருளை மட்டுமே பயன்படுத்தி ஜொலிக்க வைக்க பலருக்கும் தெரியாத சிம்பிள் ட்ரிக்! 

0
174
#image_title

வெள்ளைத் துணிகள் பளிச் பளிச் என மின்ன வேண்டுமா?  இதோ ஒரே ஒரு பொருளை மட்டுமே பயன்படுத்தி ஜொலிக்க வைக்க பலருக்கும் தெரியாத சிம்பிள் ட்ரிக்! 

நாம் எளிமையாக துணிகளை வாஷிங் மிஷினில் துவைத்தாலும் சில துணிகளை கட்டாயம் கையில் துவைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

குறிப்பாக வெள்ளை துணிகள் மற்றும் குழந்தைகளின் யூனிபார்ம் துணிகளை தனியாக ஊறவைத்து கையால் மாங்கு மாங்கு என தேய்த்து துவைப்போம். என்னதான் துணிகளை கஷ்டப்பட்டு துவைத்தாலும் வெள்ளைத் துணிகள் நாளடைவில் பழுப்பு நிறமாக மாறிவிடும்.

இதுபோன்று பழுப்பு நிறத்தில் மாறிய துணிகளை மீண்டும் வெள்ளை நிறத்தில் மாற்றுவது என்பது முடியாத காரியம் என்பதால் நாம் புதியதாக வெள்ளைத் துணிகளை வாங்கி விடுகிறோம்.  ஆனால் தற்போது வெள்ளைத் துணியை மாங்கு மாங்கு என துவைக்க வேண்டாம்.

இந்த ஒரு பொருளை மட்டும் கொண்டு வெள்ளைத் துணியில் உள்ள அழுக்குகளை போக்கி அதன் பழுப்பு நிறத்தையும் நீக்க முடியும். அது எவ்வாறு என்பதை பார்ப்போம்.

*** முதலில் ஒரு பக்கெட்டில் துணிகளை ஊற வைக்கும் அளவு வெதுவெதுப்பான வெந்நீரை எடுத்துக் கொள்ளவும். அதில் துணி துவைக்கின்ற டிடர்ஜென்ட் பவுடர் அல்லது லிக்விட் சேர்க்கவும்.

*** பிறகு அதில் நாம் பல் துலக்குவதற்கு பயன்படுத்தும் டூத் பேஸ்ட் ஒரு ஸ்பூன் அளவு சேர்க்கவும். அதை நன்றாக கலக்கி விட்டு நாம் துவைப்பதற்கு எடுத்து வைத்துள்ள வெள்ளை துணிகளை அதில் ஊற வைக்கவும். சுமார் 10நிமிடங்கள் முதல் 15 நிமிடங்கள் வரை துணிகளை ஊற வைக்கவும்.

*** நன்கு ஊறிய பிறகு துணிகளை வெளியே எடுத்து பிழிந்து வாஷிங் மிஷினில் போட்டு துவைத்தால் உங்களது துணிகள் பளிச்சன வெண்மை நிறத்தோடு மின்னும். பேஸ்ட் துணிகளில் உள்ள கறைகளை போக்குவதோடு மட்டுமில்லாமல், பழுப்பு நிறத்தையும் போக்கிவிடும்.

*** இதனால் எப்போதும் உங்கள் துணிகளை புதிது போல் வைத்திருக்க முடியும். இதே முறையை கையில் துவைக்கும் பொழுது ஊற வைத்து துணிகளை எடுத்து லேசாக சோப்பு போட்டு தேய்த்தாலே போதும். எல்லா அழுக்குகளும் காணாமல் போகும்.