இயற்கையான முறையில் சருமத்தை பராமரிக்க நினைப்பதே சிறந்த வழியாகும்.குழந்தைகளின் சரும நிறத்தை மேம்படுத்த விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள குளியல் பொடியை தயாரித்து பயன்படுத்தலாம்.கடலை பருப்பு,பன்னீர் ரோஜா உள்ளிட்ட ஐந்து பொருட்கள் அடங்கிய குளியல் பொடி செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1.கடலை பருப்பு – 50 கிராம்
2.பன்னீர் ரோஜா இதழ் – ஒரு கைப்பிடி
3.ஆரஞ்சு தோல் – ஒரு கப்
4.பாதாம் பருப்பு – கால் கப்
5.பூலாங்கிழங்கு பொடி – 20 கிராம்
செய்முறை விளக்கம்:-
1)நீங்கள் முதலில் ஒரு கைப்பிடி பன்னீர் ரோஜா இதழ் சேகரித்து வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
2)அதேபோல் இரண்டு ஆரஞ்சு பழத்தின் தோலை சேகரித்து வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
3)இரும்பு வாணலி ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் 50 கிராம் அளவிற்கு கடலை பருப்பு போட்டு மிதமான தீயில் வறுத்துக் கொள்ள வேண்டும்.பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் கொட்டி பரப்பிவிடவும்.
4)அடுத்து 1/4 கப் அளவிற்கு பாதாம் பருப்பை வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும்.
5)பிறகு மிக்சர் ஜாரை ஈரமில்லாமல் சுத்தம் செய்து காயவைத்த ரோஜா இதழ்,ஆரஞ்சு பழ தோல்,வறுத்த கடலை பருப்பு,பாதாம் பருப்பு ஆகிவற்றை போட்டுக் கொள்ளவும்.
6)பின்னர் பூலாங்கிழங்கு பொடி 20 கிராம் அளவிற்கு சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
7)இந்த பொடியை ஒரு டப்பாவில் கொட்டி தண்ணீர் படாமல் பராமரிக்கவும்.குழந்தைகளுக்கு இந்த குளியல் பொடியை பயன்படுத்தி குளிக்க வைத்தால் அவர்களின் சரும நிறம் நாளடைவில் மாறிவிடும்