திடீர் என்று அதிகரிக்கும் புதிய வகை வைரஸ்! பீதியில் மக்கள்!
குரங்கு அம்மையானது பல்வேறு கட்டங்களாக பரவுகிறது.முதல் கட்டமாக 5 நாட்கள் காய்ச்சல்,தலைவலி மற்றும் நிணநீர்க்குழாயின் வீக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படும். இந்த குரங்கு அம்மை நோயின் அறிகுறியானது இரண்டு முதல் ஐந்து வாரங்ககளுக்கு காணப்படும். நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை இந்த அறிகுறிகள் தென்படலாம்.இரண்டாம் கட்டமாக தோல் வெடுப்பு அதிலிருந்து திரவம் வெளியேறுதல் போன்றவை காணப்படும்.மூன்றாம் கட்டமாக கண்வலி பார்வை திறன் குறைவு மற்றும் மூச்சி தினறல் சிறுநீர்ப்பையின் அளவு குறைதல் போன்றவை காணப்படும்.அறிகுறிகள் உள்ள நோயாளிகளை தனிமை படுத்த வேண்டும் என்றும் மத்திய சுகாதார துறை அறிவித்துள்ளது.குரங்கு அம்மைக்கு என்று தனியாக எந்த வித முறையான சிகிச்சை முறையும் இல்லை.
அந்தந்த கட்டங்களுக்கு ஏற்றவாறு சிகிச்சை மேற்கொள்ளலாம் எனவும் மத்திய சுகாதார துறை கூறியுள்ளது. தோல் வெடிப்புகளை கிருமி நாசினிகளால் சுத்தம் செய்ய வேண்டும்.என்றும் சுகாதார துறை அறிவுறுத்துகிறார்கள்.வைரஸ் பரவாத நாடுகளில் இதுவரை 300 பாதிப்புக்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதில் இங்கிலாந்து நாடும் ஒன்று.இங்கிலாந்து நாட்டில் குரங்கு அம்மையின் பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருகின்றது.ஆப்பிரிக்காவில் காணப்படும் குரங்கு அம்மை நோயானது இப்போது அனைத்து நாடுகளிலும் பரவி வருகின்றது. தற்போது குரங்கு அம்மையின் பாதிப்பு 500 க்கும் மேல் அதிகரித்துள்ளது.என மத்திய சுகாதார துறை அறிவித்துள்ளது.நமது தமிழ்நாட்டில் இதுவரை நோய் அறிகுறி எதுவும் காணப்படவில்லை.