உஷார்.. கலப்படம் செய்யப்படும் தர்பூசணி!! இந்த சிம்டம்ஸ் தெரிந்தால் இனி வாங்காதீங்க!!

0
9

பனி காலம் முடிந்து தற்பொழுது கோடை காலம் தொடங்கிவிட்டது.வெப்பத்தை தணிக்க இனி குளிர்ச்சி நிறைந்த பழங்களை சாப்பிட மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்.தர்பூசணி,முலாம் பழம்,வெள்ளரி,நுங்கு,இளநீர் போன்றவை கோடை வெப்பத்தை தணிக்கும் உணவுப் பொருட்களாகும்.

இதில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் தர்பூசணி அதிக நீர்ச்சத்து நிறைந்த பழமாகும்.கோடை காலத்தில் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்க இந்த பழம் உதவுகிறது.ஆனால் தற்பொழுது கலப்படம் செய்யப்பட்ட தர்பூசணி பரவலாக விற்கப்படுகிறது என்ற செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.

பச்சை தர்பூசணியை செயற்கையான முறையில் பழுக்க வைத்தல்,தர்பூசணி நிறத்தை அதிகரித்தல் போன்ற கலப்பட வேலைகள் அரங்கேறி வருவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.சில எளிய டிப்ஸ் மூலம் தர்பூசணியில் கலப்படம் இருப்பதை கண்டறியலாம்.

தர்பூசணியில் கலப்படம் செய்யப்படுவதை கண்டறிய டிப்ஸ்:

முதலில் தர்பூசணி பழத்தின் நிறத்தை கவனிக்க வேண்டும்.கண்ணை பறிக்கும் அளவிற்கு நிறம் இருந்தால் அவை ஊசி செலுத்தப்பட்டிருப்பதை காட்டுகிறது.சில வியாபாரிகள் தர்பூசணி நிறத்தை அதிகரிக்க ஊசி செலுத்துகின்றனர்.

இதை கண்டறிய ஒரு தர்பூசணி கீற்றை வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு காட்டன் பஞ்சை எடுத்து தர்பூசணி கீற்று மீது வைத்து தேய்க்க வேண்டும்.பஞ்சு நிறம் சிவப்பாக மாறினால் அவை கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

இப்படி கலப்படம் செய்யப்பட்ட தர்ப்பூசணி பழத்தை உட்கொண்டால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.தைராய்டு,நரம்பு சம்மந்தபட்ட பாதிப்புகள்,சருமப் பிரச்சனைகள் ஏற்படும்.

பச்சையாக உள்ள தர்பூசணி பழத்தை பழுக்க வைக்க கார்பைடு பயன்படுத்தப்படுகிறது.இது நரம்பு மண்டலத்தை கடுமையான பாதிக்கும்.அதேபோல் வாந்தி,குமட்டல் போன்ற பாதிப்புகள் ஏற்படக் கூடும்.

Previous articleஅடிக்கடி மூச்சு வாங்குதா? இதை ஒரே இரவில் குணப்படுத்தும் சித்த வைத்தியம்!! இந்த பொடியை தேனில் குழைத்து சாப்பிடுங்க!!
Next articleஉடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பீட்ரூட் ஜூஸை யார் குடிக்கலாம்? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?