எச்சரிக்கை.. பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருக்கும் இளநீரை இவர்களெல்லாம் குடிக்கக் கூடாது!!
கோடை காலத்தில் இளநீரின் தேவை இன்றியமையாத ஒன்று.ரோட்டோரங்களில் விற்கப்படும் இளநீரை ஒருமுறையாவது வாங்கி அருந்தியிருப்பீர்.இந்த இளநீரில் அதிகளவு மினரல் உள்ளதால் இவை உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
இளநீரில் பொட்டசியம்,சோடியம்,மெக்னீசியம்,கால்சியம்,நார்ச்சத்துக்கள்,இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.உடல் சூட்டை தணிக்கும் இளநீர் வேறு எந்த பாதிப்புகளுக்கு தீர்வாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
முகத்தில் அசிங்கமாக இருக்கின்ற பருக்களை மறைய வைக்க தினமும் இளநீர் குடித்து வர வேண்டும்.வெயில் காலத்தில் பெரும்பாலானோருக்கு சிறுநீர் கழிக்கும் வலி,எரிச்சல் ஏற்படும்.இதை குணமாக்க இளநீர் அருந்துவது நல்லது.முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்க,முதுமையை தள்ளி போட இளநீர் எடுத்துக் கொள்ளலாம்.இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்த இளநீர் அருந்த வேண்டும்.இரத்த சோகைக்கு இளநீர் அருமருந்து.
இளநீர் மட்டுமல்ல அதன் வழுக்கையையும் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் இளநீரை ஒரு நாளைக்கு அதிகபட்சம் 300 மில்லி அளவு குடிக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இளநீரில் என்னதான் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது என்றாலும் இதை சிலர் எடுத்துக் கொள்ள கூடாது.அதாவது கர்ப்பிணி பெண்கள் இளநீர் அருந்தக் கூடாது.தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இளநீரை குடிக்க கூடாது.அதேபோல் சைன்ஸ்,அடிக்கடி சளி,இருமல் பிடிக்கும் நபர்கள் இளநீரை குடிக்கக் கூடாது.