டெல்டா மக்களுக்கு எச்சரிக்கை! இந்த நாட்களில் வெளுத்து வாங்கும் கனமழை!!

Photo of author

By Amutha

டெல்டா மக்களுக்கு எச்சரிக்கை! இந்த நாட்களில் வெளுத்து வாங்கும் கனமழை!!

Amutha

Warning Delta people! Heavy rain these days!!

டெல்டா மக்களுக்கு எச்சரிக்கை! இந்த நாட்களில் வெளுத்து வாங்கும் கனமழை!!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுப் பற்றி சென்னை வானிலை மையம் கூறி உள்ளதாவது,தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று டிசம்பர்-24  காலை 8:30 மணி அளவில் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 470 கி,மீ தொலைவில் மையம் கொண்டு உள்ளது.இது மேலும் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை டிசம்பர்-25 ஆம் தேதி இலங்கை அருகே நிலை கொள்ள கூடும்.

இது மேலும் நகர்ந்து மேற்கு- தென் மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி வரக்கூடும். இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள்,புதுவை, மற்றும் காரைக்காலின் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் சில இடங்களிலும் இன்று டிசம்பர்-24 லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, மற்றும் காரைக்காலின் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும்  இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை நாளை டிசம்பர்-25 ஆம் தேதி பெய்யும். மேலும் புதுகோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.