உங்களுக்கு காலை நேரத்தில் டீ குடிக்கும் பழக்கம் இருந்தால் இனி அந்த பழக்கத்தை தொடராதீர்கள்.இந்தியர்களுக்கு தங்கள் காலை நேரத்தில் ஒரு கப் சூடான தேநீருடன் தொடங்குகின்றனர்.காலை நேரத்தில் உடல் அசதி மற்றும் சோர்வை உணரும் நபர்கள் ஒரு கப் டீ குடித்து தங்களை சுறுசுறுப்பாகி கொள்கின்றனர்.
சிலர் காலை உணவிற்கு பதில் ஒரு கப் டீ குடித்து பசியை போக்கி கொள்கின்றனர்.ஆனால் காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு செயலாகும்.
காலை நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் அமிலச் சுரப்பி அதிகரித்து அசிடிட்டியை ஏற்படுத்திவிடும்.எனவே டீ குடிப்பதற்கு முன்னர் அவசியம் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
வெறும் வயிற்றில் சூடான பானங்களை பருகுவதால் வயிறு எரிச்சல்,வயிறு கடுப்பு,உடல் உஷ்ணம் போன்ற பாதிப்புகள் ஏற்படக் கூடும்.காலையில் வெறும் வயிற்றில் டீ குடித்தால் வயிற்றில் புண்கள் உருவாகிவிடும்.இது அல்சராக மாறி கடுமையான தொந்தரவுகளை கொடுத்துவிடும்.பற்களை துலக்காமல் வெறும் வயிற்றில் டீ காபி குடித்தால் வாய் துர்நாற்றம் அதிகரிக்கும்.பற்களின் நிறம் மாற வாய்ப்பிருக்கிறது.
எனவே காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதை தவிருங்கள்.டீ குடிப்பதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு டீ அல்லது காபியை சுவையுங்கள்.