பெண்கள் பலர் தங்ககள் உதட்டை அழகாக காட்டிக் கொள்ள உதட்டுச்சாயம் பயன்படுகின்றனர்.மேக்அப் போடவில்லை என்றாலும் உதட்டிற்கு லிப்ஸ்டிக் பயன்படுத்தினாலே தனி லுக் கிடைக்கும் என்பதனால் பெரும்பாலான பெண்கள் அதை விரும்பி பயன்படுத்துகின்றனர்.ஆனால் இந்த உதட்டுச்சாயம் உடலுக்கு ஆபத்தானவை என்றும் இதனால் பக்கவிளைவுகள் ஏற்படக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உதடுகளில் பயன்படுத்தும் கெமிக்கல் சாயம் உணவு உட்கொள்ளும் போது நேரடியாக உடலுக்கு செல்கிறது.இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுகிறது.குரோமியம்,அலுமினியம்,மாங்கனீசு,காட்மியம் போன்ற வேதிப் பொருட்களை பயன்படுத்தி லிப்ஸ்டிக் தயாரிக்கப்படுகிறது.
இந்த லிப்ஸிட்க் உடலுக்குள் சென்று உள்ளுறுப்புகளை பாதிக்கச் செய்துவிடும்.இதனால் தினமும் லிப்ஸ்டிக் போடுவதை தவிர்க்க அவசியம்.உங்களால் லிப்ஸ்டிக் போடும் பழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் கீழ்கண்ட நோய் பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
1)லிப்ஸ்டிக் உடலுக்குள் சென்றால் இரத்த அழுத்தம் அதிகமாகும்.
2)உதட்டுச்சாயம் உடலுக்குள் சென்றால் இருதயம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும்.
3)தினமும் லிப்ஸ்டிக் போடும் பழக்கம் இருக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கின்றது.
4)சிலருக்கு லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
5)அடர்ந்த நிறம் கொண்ட உதட்டுச்சாயம் பயன்படுத்துவதால் உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும்.
6)தொடர்ந்து லிப்ஸ்டிக் பயன்படுத்தி வந்தால் உதடு வெடிப்பு மற்றும் வறட்சி ஏற்படும்.
7)தினமும் லிப்ஸ்டிக் பயன்படுத்தி வந்தால் கண் எரிச்சல்,சுவாசப் பிரச்சனை,மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.