Windows 10 பயனாளர்களுக்கான எச்சரிக்கை!! மைக்ரோசாப்ட் அதிரடி முடிவு!!

Photo of author

By Gayathri

Windows 10 பயனாளர்களுக்கான எச்சரிக்கை!! மைக்ரோசாப்ட் அதிரடி முடிவு!!

Gayathri

Warning for Windows 10 users!! Microsoft action decision!!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பயனர்கள் உலகம் முழுவதும் பல கோடி கணக்கானோர் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் விண்டோஸ் 10 பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனமானது குறிப்பிட்ட கால அவகாசத்தை கொடுத்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 11 அறிமுகம் செய்யப்பட்ட பின்பும் விண்டோஸ் 10 பயன்படுத்தக்கூடிய பயனாளர்கள் அதிக அளவில் இருப்பது விண்டோஸ் 10 இயங்கு தளத்தின் எளிமை தன்மையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. எனினும் 2025 அக்டோபர் 14ஆம் தேதி முதல் இந்த விண்டோஸ் 10 க்கான இயங்குதல் ஆதரவை மைக்ரோசாப்ட் நிறுத்த இருப்பதாக அறிவித்திருக்கிறது.

இவ்வாறு செய்வதன் மூலம் விண்டோஸ் 10 பயன்படுத்தக் கூடிய பயனர்களின் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் சைபர் குற்றவாளிகளால் எளிதில் ஹேக் செய்யப்பட்டு பயணங்கள் உடைய தரவுகள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து பிரபலமான ESET சைபர் செக்யூரிட்டி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவித்திருப்பதாவது :-

விண்டோஸ் 10 பயனர்கள் அக்டோபர் மாதம் வரை காத்திருக்காமல் தங்களுடைய இயங்குதலத்தை விண்டோஸ் 11 இருக்கு உடனடியாக மாற்றி அமைக்கும் படியும், தங்களுடைய லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 11 மாற்ற இயலாத பயணங்கள் மாற்று வழியான லினக்ஸ் இணையதளத்திற்கு மாறிக்கொள்ளுமாறும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுடைய தரவுகள் பாதுகாக்கப்படுவதுடன் நிதி மோசடியில் இருந்து தப்பிப்பதற்கு சிறந்த வழியாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உங்களுடைய கணினியின் கட்டுப்பாடு உங்களுடையதாகவே இருக்க இப்படி செய்வது மட்டுமே ஒரே வழி என்றும் பிரபலமான ESET சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.