உடல் ஆரோக்கியம் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் முக்கியமான ஒன்று.இன்றைய காலகட்டத்தில் உண்ணும் உணவுகளில் ஊட்டச்சத்துக்களை விட கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது.இதனால் உடலில் அளவிற்கு அதிகமாக கெட்ட கொலஸ்ட்ரால் சேர்ந்து உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
கொலஸ்ட்ரால் ஒரு மெழுகு போன்ற பொருளாகும்.இந்த கொலஸ்ட்ரால் இரத்தத்தில் காணப்படுகிறது.நமது உடலுக்கு போதிய கொலஸ்ட்ராலை கல்லீரல் உற்பத்தி செய்கிறது.ஆனால் நாம் உண்ணும் உணவின் வாயிலாகவும் உடலில் கொலஸ்ட்ரால் அதிகளவு சேர்க்கிறது.இதனால் உடல் மோசமான பாதிப்புகளை சந்திக்கிறது.
இந்த கொலஸ்ட்ரால் பிரச்சனையை பெண்களை விட ஆண்கள் அதிகம் சந்தித்து வருகின்றனர்.உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகளவு படிந்தால் அது மாரடைப்பு அபாயத்தை ஏற்படுத்தும்.உண்ணும் உணவில் உள்ள கொலஸ்ட்ரால் இரத்தக்குழாயில் படிந்து மாரடைப்பை உண்டாக்கிவிடும்.இந்த கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பதை சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் கை விரல்களில் மஞ்சள் நிறத்தில் புடைப்பு காணப்பட்டால் அது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளதற்கான அறிகுறிகளாகும்.உடலில் அதிகளவு கொழுப்புகள் தேங்குவதால் இந்த மஞ்சள் நிற புடைப்புகள் உருவாகிறது.
உங்கள் கை விரல் சதைப்பற்று தடித்து இருந்தால் அது அதிக கெட்ட கொலஸ்ட்ரால் இருப்பதற்கான அறிகுறிகளாகும்.உங்களுக்கு அடிக்கடி கை விரல்கள் மரத்து போகிறது என்றால் அது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்து விட்டது என்பதற்கான அறிகுறிகளில் ஒன்றாகும்.கைகள் மற்றும் கை விரல்களில் அதிக வலி,பலவீனத்தை உணர்ந்தால் அலட்சியம் கொள்ள வேண்டும்.இது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்துவிட்டது என்பதை உணர்த்தும் அறிகுறிகளாகும்.கை மற்றும் விரல்களில் இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.