எச்சரிக்கை!! உடலில் இந்த கொழுப்பு மட்டும் அதிகமாகிவிட்டால் கட்டயம் இந்த 5 நோய்கள் வந்துவிடும்!!

Photo of author

By Divya

எச்சரிக்கை!! உடலில் இந்த கொழுப்பு மட்டும் அதிகமாகிவிட்டால் கட்டயம் இந்த 5 நோய்கள் வந்துவிடும்!!

Divya

நமது உடல் ஆரோக்கியத்திற்கு கொழுப்பு சத்து அவசியமான ஒன்றாக திகழ்கிறது.உடலில் நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு என்று இரு வகைகள் இருக்கின்றது.இதில் எல்டிஎல் ஈன்று அழைக்கப்படும் கெட்ட கொழுப்பு குவிந்தால் பல நோய் பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகளவு குவிகிறது.எண்ணையில் வறுத்த பொரித்த உணவுகள்,கொழுப்பு நிறைந்த உணவுகள்,கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் உடலில் கெட்ட கொழுப்பை அதிகரித்துவிடுகிறது.இதனால் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து நோயாளிகளாக மாற நேரிடுகிறது.

உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்தால் என்னென்ன பாதிப்புகளை சந்திக்க நேரிடும?

1)எல்டிஎல் கொழுப்பு அதிகரித்தால் இதயம் சம்மந்தபட்ட பிரச்சனைகளை அனுபவிக்க நேரிடும்.இதய இரத்தக் குழாயில் கொழுப்புகள் படிந்தால் மாரடைப்பு பாதிப்பு ஏற்படும்.

2)இரத்தக் குழாயில் கெட்ட கொழுப்பு படிந்தால் இதய தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதம்,மாரடைப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

3)உடலில் கெட்ட கொழுப்பு படிந்தால் உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு ஏற்படும்.இரத்த ஓட்டம் தடைபட்டு இரத்த அழுத்தம்
உண்டாகும்.

4)நமது உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்தால் சர்க்கரை நோய் பாதிப்பை அனுபவிக்க நேரிடும்.

5)உடலில் கெட்ட கொழுப்பு குவிவதால் உடல் பருமன் ஏற்பட்டு பல்வேறு நோய் பாதிப்புகளை அனுபவிக்க நேரிடும்.

எனவே உடலில் கெட்ட கொழுப்பு குவியாமல் இருக்க ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.நிறைவுற்ற கொழுப்பு உணவுகளை சாப்பிட வேண்டும்.

அதிகளவு சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கப்படாத உணவுகளை உட்கொள்ள வேண்டும்.முழு தானிய உணவுகளை சாப்பிட வேண்டும்.முளைக்கட்டிய பயறு வகைகளை சாப்பிட வேண்டும்.நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும்.