நமது உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றுதான் புரதம்.நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள புரதம் உதவுகிறது.நமது உடலில் புரதச்சத்து குறைந்தால் என்ன மாதிரியான பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
நமது உடலில் புரதச்சத்து குறைந்தால் நகங்கள் உடைய தொடங்கும்.நகங்களில் விரிசல் ஏற்படுதல்,சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுதல்,கூந்தல் ஆரோக்கியம் மோசமானதால் போன்றவை புரதச்சத்து குறைபாட்டால் ஏற்படக் கூடிய பாதிப்புகளாகும்.அதேபோல் உடலில் புரதச்சத்து குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.உடலில் புரதச்சத்து குறைந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
புரதச்சத்து குறைபாட்டால் ஏற்படக் கூடிய பாதிப்புகள்:
1)தசைப்பிடிப்பு
2)எலும்பு வலிமை இழத்தல்
3)அதிக பசி ஏற்படுதல்
4)உடல் பருமன் உண்டதால்
5)கல்லீரல் ஆரோக்கியம் பாதிக்கப்படுதல்
6)மூட்டு பகுதியில் அதிக வலி உண்டதால்
புரதச்சத்து குறைபாட்டை குணப்படுத்தும் உணவுகள்:
**முட்டையில் அதிக புரதம் நிறைந்திருக்கிறது.வளரும் குழந்தைகளுக்கு முட்டை உணவுகளை கொடுக்க வேண்டும்.
**பாதாம் பருப்பில் அதிகளவு புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது.பால்,சோயா போன்ற உணவுப் பொருட்களில் புரதச்சத்து அதிகம் நிறைந்து காணப்படுகிறது.
**தயிர் உணவுகளில் புரதம் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.ஓட்ஸ்,பிராய்லர் கோழி போன்றவற்றில் புரதச்சத்து அதிகமாக இருக்கின்றது.
**பாலில் இருந்து தயாரிக்கப்படும் சீஸ்,பாலாடைக்கட்டியில் அதிக புரதம் இருக்கிறது.மீன்,பச்சை காய்கறிகள்,கீரைகளில் புரதச்சத்து நிறைந்துள்ளது.
**பருப்பு வகைகளில் புரதம் நிறைந்திருக்கிறது.பூசணி விதை,ஆளி விதையில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது.முளைக்கட்டப்பட்ட தானியங்களில் புரதம் அதிகமாக இருக்கிறது.
**வேர்கடலை,சிறுதானியங்கள்,பீன்ஸ்,புரோக்கோலி போன்றவற்றில் அதிகளவு புரதம் நிறைந்திருக்கிறது.தினமும் 50% புரத உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.