எச்சரிக்கை.. உடலில் இந்த சத்து குறைந்தால் மூட்டு வலி முதுகு வலி எல்லாம் ஏற்படுமாம்!!

Photo of author

By Divya

எச்சரிக்கை.. உடலில் இந்த சத்து குறைந்தால் மூட்டு வலி முதுகு வலி எல்லாம் ஏற்படுமாம்!!

Divya

உடலில் உள்ள எலும்புகள் உறுதியாக இருந்தால் தான் நம்மால் நடத்தல்,ஓடுதல்,உடலை இயக்குதல் போன்ற செயல்களை செய்ய முடியும்.உடல் எலும்புகள் வலிமையாக இருக்க கால்சியம் சத்து அவசியம் தேவைப்படுகிறது.உடலில் கால்சியம் சத்து குறைவதை ஹைபோகால்சீமியா என்று அழைக்கின்றனர்.உடலில் கால்சியம் சத்து குறையும் பொழுது பல்வேறு சுகாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

கால்சியம் குறைபாடு இருந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்படும்?

மூட்டு பகுதியில் கடுமையான வலி ஏற்படும்.எலும்புகள் தன் வலிமையை இழந்து பலவீனமாகிவிடும்.இதனால் எலும்பு முறிவு,எலும்பு வலி போன்ற பாதிப்புகள் அதிகமாக ஏற்படும்.

தசை பலவீனம் பிரச்சனை அதிகமாக ஏற்படும்.அதிகப்படியான உடல் சோர்வு கால்சியம் குறைபாட்டால் ஏற்படுகிறது.

நரம்பு தொடர்பான பிரச்சனைகள் கால்சியம் குறைபாட்டால் ஏற்படுகிறது.கை கால் மரத்து போதல் பிரச்சனை கால்சியம் குறைபாட்டால் ஏற்படுகிறது.

நகங்கள் எளிதில் உடைந்து போதல்,பல் சிதைவு ஏற்படுதல் போன்றவை கால்சியம் குறைபாட்டால் தான் ஏற்படுகிறது.தூக்கமின்மை பிரச்சனை கால்சியம் குறைபாட்டின் அறிகுறியாகும்.

கால்சியம் குறைபாடு ஏற்பட காரணங்கள்:

1)சிறுநீரகம் தொடர்பான நோய் பாதிப்புகள்
2)தைராய்டு நோய் பாதிப்பு
3)குடல் தொடர்பான நோய் பாதிப்புகள்
4)வைட்டமின் டி குறைபாடு

கால்சியம் குறைபாட்டை சரி செய்யும் உணவுகள்:-

பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.சோயா பொருட்களில் கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது.

முட்டை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கும்.முருங்கை கீரை,பசலை கீரை போன்றவற்றில் அதிகமான கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது.

உலர் அத்திப்பழத்தில் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படாமல் இருக்கும்.நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் கால்சியம் சத்து கிடைக்கும்.

கருப்பு எள்,சியா விதைகள்,ராகி,தினை,சால்மன் மீன் போன்றவற்றில் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலில் கால்சியம் சத்து அதிகரிக்கும்.