எச்சரிக்கை.. கோழி இறைச்சியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் விஷமாகிவிடும்!!

தற்பொழுது கோழி இறைச்சி இல்லாத உணவுகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.மக்கள் மத்தியில் கோழி இறைச்சி உணவுகள் அதிக பிரபலமாக உள்ளது.கோழி சில்லி,கோழி வறுவல்,கோழி கிரேவி,கோழி பிரியாணி,கோழி சுக்கா என்று பல வகை கோழி உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றோம்.கோழி உணவு ருசியாகவும்,மணமாகவும் இருப்பதால் பலரும் இதற்கு அடிமையாகி இருக்கின்றனர்.

சிலர் தினமும் கோழிக்கறி சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.இது உடல் ஆரயோக்கியத்திற்கு நல்லது இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.அதேபோல் கோழி உணவுகளுடன் வேறுசில உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் அவை உடல் ஆரோக்கியத்திற்கு பாதகமாகிவிடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கோழி இறைச்சியுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள்:-

1)பால்

கோழி இறைச்சி சாப்பிட்ட பிறகு பால் அல்லது பால் பொருட்களை எடுத்துக் கொண்டால் அவை உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

2)தேன்

கோழி இறைச்சி உணவுகளை சாப்பிட்ட பிறகு தேன் சாப்பிட்டால் உடலில் அஜீரணக் கோளாறு ஏற்பட்டுவிடும்.

3)மீன் உணவு

கோழியுடன் மீன் உணவுகளை சேர்த்து உட்கொண்டால் அவை உடலில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கிவிடும்.

4)ஜூஸ்

கோழி உணவுகள் உட்கொண்ட பிறகு பழச்சாறு பருகினால் வாயுத் தொல்லை,வயிறு உப்பசம்,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

5)உருளைக்கிழங்கு

கோழி இறைச்சியுடன் சிலர் உருளைக்கிழங்கு சேர்த்து சாப்பிடும் பழக்கம் கொண்டிருக்கின்றனர்.இப்படி சாப்பிட்டால் வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை,செரிமானப் பிரச்சனை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

6)தயிர்

கோழி உணவுகள் சாப்பிட்ட பிறகு தயிர் உட்கொண்டாலோ அல்லது கோழி உணவில் தயிர் சேர்த்துக் கொண்டாலோ அவை செரிமானப் பிரச்சனையை உண்டாக்கிவிடும்.எனவே இந்த உணவுகளை எல்லாம் கோழி இறைச்சி உணவுகளுடன் சேர்த்து உட்கொள்வதை தவிர்த்து கொள்ளுங்கள்.