உஷார்.. உங்கள் உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் கிட்னி செயலிழக்கப் போகிறது என்று அர்த்தம்!!

Photo of author

By Divya

உஷார்.. உங்கள் உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் கிட்னி செயலிழக்கப் போகிறது என்று அர்த்தம்!!

நமது உடலில் உருவாகும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறுநீரகம் செய்கின்றது.முக்கிய பணியை செய்யும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடும்.

மனித உடலில் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளது.நாம் உட்கொள்ளக் கூடிய உணவுகளில் இருந்து பிரியும் கழிவுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் சிறுநீரகத்தில் ஒன்று செயலிழந்தால் என்னவாகும்? ஒரு கிட்னியுடன் வாழ முடியுமா? என்று அறிந்து கொள்வது அவசியமாகும்.

இன்று பலர் ஒரு கிட்னியுடன் வாழ்ந்து வருவதை பார்க்க முடிகிறது.ஒரு கிட்னியுடன் பிறந்தவர்கள்,ஒரு கிட்னி தானம் செய்தவர்கள்,ஒரு கிட்னி செயலிழந்தவர்கள் என்று ஒரு கிட்னியோடு வாழும் நபர்கள் சில விஷயங்களை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

கிட்னி செயலிழப்பு அறிகுறிகள்:-

1)அதிகப்படியான சிறுநீர் வெளியேறுதல்

2)அரிப்பு

3)வாந்தி

4)பசியின்மை

5)சுவாசப் பிரச்சனை

6)வயிற்றுப்போக்கு

7)கை கால் வீக்கம்
.
ஒரு கிட்னியுடன் வாழும் நபர்கள் பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய வழிமுறைகள்:-

உடல் எடையை ஆரோக்கியமான முறையில் பராமரிக்க வேண்டும்.

தினமும் 2 1/2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.சிறுநீரை அடக்கி வைக்காமல் உரிய நேரத்தில் கழித்துவிட வேண்டும்.

நுரையுடன் சிறுநீர் வெளியேறினால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

ஆண்டிற்கு ஒருமுறை கிட்னியின் ஆரோக்கியத்தை அறிந்து கொள்ள உரிய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

சிறுநீரக கற்கள் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.