உஷார்.. உங்கள் நாக்கின் நிறம் இப்படி இருந்தால் உயிருக்கே ஆபத்தாகிவிடும்!!

Photo of author

By Rupa

நாக்கு சுவையை கண்டறியும் உறுப்பாக இருக்கின்றது.சுவையுணர்வு ஏற்பிகள் நம் நாக்கில் அதிகளவு இருப்பதால் அவை நாம் உண்ணும் உணவின் சுவையை அறிய உதவுகிறது.நம் நாக்கை சுத்தமாக வைத்துக் கொள்ள தவறினால் பாக்டீரியாக்கள்,பூஞ்சைகள்,தொற்றுக் கிருமிகள் தேங்கி நோய் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

அதேபோல் நமது நாக்கின் நிறத்தை வைத்தே உடலில் ஏற்பட்டுள்ள நோய் பாதிப்புகளை எளிதில் கண்டறிந்துவிட முடியும்.உங்கள் நாக்கு எந்த நிறத்தில் இருந்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அடர் சிவப்பு

உங்கள் நாக்கு அடர் சிவப்பு நிறத்தில் இருந்தால் உங்களுக்கு அலர்ஜி,உடலில் தொற்று பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தம்.

மஞ்சள்

உங்கள் நாக்கின் நிறம் மஞ்சளாக இருந்தால் கல்லீரல் பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தம்.நாக்கின் நிறம் மஞ்சளாக இருந்தால் மஞ்சள் காமாலைக்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

காபி நிறம்

உங்கள் நாக்கில் காபி நிற படிவு இருந்தால் அது நுரையீரல் பாதிப்பிற்கான அறிகுறியாக இருக்கலாம்.

ரோஸ் நிறம்

உங்கள் நாக்கு ரோஸ் நிறத்தில் இருந்தால் அது உடல் ஆரோக்கியத்தை குறிக்கிறது.அனைவருக்கும் ரோஸ் நிற நாக்கு இருப்பதில்லை.ரோஸ் நிறத்தில் நாக்கு இருந்தால் அது உடலில் நோய் பாதிப்பு இல்லை என்பதை குறிக்கிறது.

நீல நிறம்

சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் இருந்தால் நாக்கின் நிறம் நீலமாக காணப்படும்.

இளஞ்சிவப்பு

இதயம் அல்லது இரத்தம் தொடர்பான பாதிப்புகள் இருந்தால் நாக்கின் நிறம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

வெள்ளை

நாக்கின் மேல் வெள்ளைப்படலம் அதிகமாக இருந்தால் நுண்கிருமிகள் மற்றும் காய்ச்சல் பாதிப்பின் அறிகுறியாகும்.

சிமெண்ட்

மூல நோய்,செரிமானப் பிரச்சனை இருப்பவர்களுக்கு நாக்கு சிமெண்ட் நிறத்தில் இருக்கும்.