ரயில்வே வெளியிட்ட எச்சரிக்கை! இனி இவர்களுக்கு டெண்டர் விட வாய்ப்பில்லை?
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் கூட்ட நெரிசலில் செல்ல அச்சமடைந்தனர். மேலும் நீண்ட தூர பயணத்திற்காக பொதுமக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.
அதனால் தெற்கு ரயில்வே பல்வேறு வசதிகளை பயணிகளுக்கு ஏற்படுத்தி தருகின்றது. இந்நிலையில் கடந்த பொங்கல் பண்டிகை என்று அனைத்து பகுதிகளுக்கும் கூடுதலாக ரயில் சேவை இயக்கப்பட்டது. தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ரயிலில் ஏசி பெட்டிகளில் அழுக்கு போர்வைகள், அழுக்கு பெட் சீட்டுகள் மற்றும் கேட்டரிங் சேவைகளில் அலட்சியம் போன்றவை காணப்படுகின்றது.
இதனை சரி செய்ய இந்திய ரயில்வே தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இந்த விவகாரத்தில் ரயில்வே வாரியம்யானது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. அதாவது ரயில்களை சுத்தம் செய்தல் போர்வைகளை துவைத்தல், உணவு வழங்குதல் ஆகிய பணிகளுக்கு இனி டெண்டர் வெகு நாட்களுக்கு வழங்கப்படாது என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
இதுக்குரிய காலம் குறைந்தபட்சமாக குறைக்கப்பட்டு காலாவதியான பிறகு புதுப்பிக்கப்படும். இதன் காரணமாக ஒப்பந்ததாரர்கள் அலட்சியப் போக்கை தவிர்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர்களின் அலட்சியத்தை தவிர்த்தால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாக மாட்டார்கள். ரயிலின் அனைத்து வசதிகள் குறித்து டெண்டர் காலத்தை ஆறு மாதங்களாக குறைக்க உள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
முன்பாக இந்த டெண்டர்கள் மூன்று அல்லது ஐந்து வருடங்களுக்கு இருந்தது கால அவகாசம் முடிவடைந்த உடன் ஒப்பந்ததாரர்கள் தனக்குள்ள தொடர்புகள் வாயிலாக மீண்டும் டெண்டர் எடுப்பது வழக்கம் இனி வேலையில் அலட்சியமாக இருப்பின் டெண்டர் நீட்டிக்கப்படாது. குறுகிய கால டெண்டர் எனில் ஒப்பந்ததாரர்களின் அலட்சியமாக இருக்க மாட்டார்கள். அதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.