எச்சரிக்கை.. லெமன் ஜூஸ் குடிப்பதற்கு முன்னர் இந்த மிஸ்டேக்ஸ் செய்தால் உயிருக்கு ஆப்புதான்!!

Photo of author

By Divya

எச்சரிக்கை.. லெமன் ஜூஸ் குடிப்பதற்கு முன்னர் இந்த மிஸ்டேக்ஸ் செய்தால் உயிருக்கு ஆப்புதான்!!

Divya

எலுமிச்சையை கொண்டு ஜூஸ்,சாலட்,சாதம்,ஊறுகாய்,தொக்கு,தேநீர் என்று வகை வகையான உணவுகள் செய்து சாப்பிட்டு வருகின்றோம்.எலுமிச்சை சாறை பயன்படுத்தி ஜூஸ் செய்து குடிப்பதை பலரும் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

எலுமிச்சை சாறு வைட்டமின் சி சத்து நிறைந்தவை என்பதால் பலரும் அதை விரும்பி பருகுகின்றனர்.எலுமிச்சை சாறு குடித்தால் சருமம் சார்ந்த பாதிப்புகள் அகலும் என்று பலரும் கூறுகின்றனர்.மற்ற பானங்களை காட்டிலும் எலுமிச்சை ஆரோக்கியமானதாக இருப்பதால் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் ஜூஸை வாங்கி குடிக்கின்றனர்.

எலுமிச்சை ஜூஸ் நல்லது என்றாலும் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் ஜூஸை குடித்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.அதேபோல் வீட்டில் எலுமிச்சை ஜூஸ் தயாரித்து சாப்பிடும் பழக்கம் இருப்பவர்கள் சில தவறுகளை செய்தால் அவை ஆரோக்கியம் இல்லாத பானமாகிவிடும்.

எலுமிச்சம் பழச்சாறு அதிக அமிலத் தன்மை கொண்டவையாக உள்ளது.எலுமிச்சை சாறை நேரடியாக பருகினால் வயிற்றில் அமில அளவு அதிகரித்துவிடும்.வயிறு எரிச்சல்,நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகள் இதனால் ஏற்படும்.

ஒரு பங்கு எலுமிச்சை சாறுக்கு நான்கு அல்லது ஐந்து பங்கு தண்ணீர் ஊற்றி பருக வேண்டும்.எலுமிச்சை சாறில் செயற்கை பதப்படுத்திகளை பயன்படுத்தினால் அவை உடல் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும்.

காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.இதனால் வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகள் ஏற்படும்.அடிவயிற்றுப் பகுதியில் அமிலத் தன்மை அதிகரித்து வாயுத் தொல்லை அதிகமாகிவிடும்.லெமன் சாறை தண்ணீர் கலக்காமல் குடித்தால் பற்கள் சேதமாகிவிடும்.அளவிற்கு அதிகமாக எலுமிச்சை சாறு குடித்தால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.