எச்சரிக்கை.. ஆண்களே மீல்மேக்கர் சாப்பிடும் முன் கட்டாயம் இதை தெரிந்துக் கொள்ளுங்கள்!! 

Photo of author

By Rupa

சைவப் பிரியர்கள் விரும்பி உண்ணும் மீல் மேக்கரில் புரதச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது.இறைச்சி சுவையை ஒத்திருப்பதால் அசைவப் பிரியர்களும் பிரியாணி,கிரேவி,ப்ரை போன்று வெரைட்டியாக செய்து சாப்பிடுகின்றனர்.

சோயா பீன்ஸை அரைத்த பிறகு கிடைக்கும் சக்கையை கொண்டு மீல் மேக்கர் தயாரிக்கப்படுகிறது.சோயாவில் அதிக புரதச்சத்து நிறைந்துள்ளதால் அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.ஆனால் இதை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் பல பாதிப்புகள் ஏற்படக் கூடும்.

குறிப்பாக ஆண்களுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.உடலில் ஹார்மோன் சமநிலை மாறிவிடும்.சிலருக்கு அதிகளவு மீல் மேக்கர் சாப்பிடுவதால் உடலில் ஒவ்வாமை ஏற்படும்.அதிகளவு மீல் மேக்கர் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படக்கூடும்.

மீல் மேக்கர் உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டால் உடலில் புற்றுநோய் செல்கள் அதிகளவு உருவாகிவிடும்.மீல் மேக்கரில் அதிகம் புரதம் நிறைந்திருப்பதால் சிலருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

கர்ப்பிணி பெண்கள்,தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் மீல் மேக்கர் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.மீல் மேக்கரில் உள்ள பைட்டோ ஈஸ்டிரோஜன் சிறுநீரகத்தை செயலிழக்க செய்துவிடும்.மீல் மேக்கரில் சில நன்மைகள் இருந்தாலும் அதை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

அடிக்கடி மீல் மேக்கரை உட்கொண்டால் வயிற்றுவலி,ஒவ்வாமை,தலைவலி,மயக்கம்,தசை வல மற்றும் எலும்பு வலி ஏற்படும்.