இந்தியாவில் வட மாநிலங்களில் கோதுமை பயன்பாடு அதிகமாக இருக்கிறது.கோதுமையில் செய்யப்பட்ட பூரி,சப்பாத்தி போன்றவை வட மாநில மக்களின் பிரதான உணவாக இருக்கின்றது.கோதுமையில் நார்ச்சத்து,பாஸ்பரஸ்,கால்சியம்,பொட்டாசியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
சர்க்கரை நோய் முதல் மலச்சிக்கல் வரையிலான நோய் பாதிப்புகளுக்கு கோதுமை உணவுகள் அருமருந்தாக திகழ்கிறது.செரிமான பாதிப்பு,இரத்த அழுத்தம்,கெட்ட கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்புகள் குணமாக கோதுமை உணவுகளை சாப்பிடலாம்.
இப்படி கோதுமை உணவால் கிடைக்கும் நன்மைகளை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.ஆனால் இந்த கோதுமையை உட்கொண்டு தலைமுடி உதிர்வு,வாந்தி,நகம் உடைதல் போன்ற பிரச்சனைகளை ஒரு கிராமமே சந்தித்திருக்கிறது.மகாராஸ்டிராவில் புல்தானா என்ற மாவட்டத்தில் உள்ள மக்கள் ரேசன் கோதுமை உணவை சாப்பிட்டதால் தலை முடி உதிர்ந்து வழுக்கை பிரச்சனையை சந்தித்தனர்.சிலருக்கு வாந்தி,மயக்கம் போன்ற பாதிப்பு உண்டானது.
இது நாடு முழுவதும் அதிருப்தியை ஏற்படுத்தியது.பின்னர் நடத்தப்பட்ட ஆய்வில் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் அளவிற்கு அதிகமாக செலினியம் இருப்பது உறுதியானது.இந்த செலினியம் அளவில் 600 மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.இந்த செலினியத்தின் அளவு அதிகமாக இருந்ததன் விளைவாகத் தான் மக்கள் இதுபோன்ற உடல் நலப் பிரச்சனையை சந்தித்தனர்.
நமது உடலுக்கு தேவையான கனிமங்களின் ஒன்றான செலினியம் பல்வேறு நன்மைகளை நமக்கு வழங்குகிறது.சர்க்கரை நோய்,புற்றுநோய் போன்ற பாதிப்புகளில் இருந்து செலினியம் நம்மை காக்கிறது.இருப்பினும் செலினியத்தின் அளவு அதிகரித்தால் தோல் எரிச்சல்,சொறி,முடி உதிர்வு,நகம் சேதமடைதல்,நரம்பு மண்டல பாதிப்பு,சுவாச துர்நாற்றம் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.