எச்சரிக்கை.. இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு கண் புரை நோய் வர 100% வாய்ப்பு இருக்கு!!

Photo of author

By Divya

எச்சரிக்கை.. இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு கண் புரை நோய் வர 100% வாய்ப்பு இருக்கு!!

Divya

நமது கண்கள் ஆரோக்கியமாக இருந்தால் கண் லென்ஸ் வழியாக ஒளியானது தெளிவாக செல்லும்.அதுவே கண் புரை இருந்தால் லென்ஸில் சரியாக ஒளி செல்லாது.தற்பொழுது கண்புரை பாதிப்பால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் கண்புரை பாதிப்பு வரலாம்.

கண்புரை:

கண்களின் மேல் வளரும் சதையை தான் கண்புரை என்று அழைக்கின்றோம்.இந்த கண்புரை இருந்தால் கண் பார்வை தெளிவாக இருக்காது.அருகில் இருக்கும் பொருட்களை கூட பார்ப்பது சிரமமாகிவிடும்.கண் புரைக்கு ஆரம்ப நிலையில் சிகிச்சை அளிக்காவிட்டால் கண்புரை மேல் சதை வளரும்.அதாவது அடுக்கு சதை வளர்ந்து கண் பார்வையே பறிபோக வாய்ப்பிருக்கிறது.

கண்புரை ஏற்பட காரணம்:

கண்களில் உள்ள லென்ஸில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் கண்புரை ஏற்படும்.இது தவிர மேலும் சில காரணங்களால் கண்புரை வர வாய்ப்பிருக்கிறது.

கண்புரை யாருக்கு வர வாய்ப்பிருக்கிறது?

1)வயது முதுமையை சந்திப்பவர்களுக்கு கண்புரை வர வாய்ப்பிருக்கிறது.

2)சர்க்கரை நோயாளிகளுக்கு கண்புரை வர அதிக வாய்ப்புள்ளது.

3)கண்களில் காயங்கள் அல்லது அழுத்தம் ஏற்படுவர்களுக்கு கண்புரை வர வாய்ப்புகள் அதிகம்.

4)நேரடி சூரிய வெளிச்சத்தில் வேலை செய்யபவர்களுக்கு கண்புரை வர வாய்ப்பிருக்கிறது.

5)ஸ்டிராய்டு மருந்துகளை அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு கண்புரை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

6)நாற்பத்து ஐந்து வயதை கடந்தவர்களுக்கு கண்புரை வர வாய்ப்பிருக்கிறது.

கண்புரை அறிகுறிகள்:

**கண் பார்வை மங்கலாக தெரிதல்

**சூரிய வெளிச்சத்தை பார்க்கும் பொழுது கண் கூசுதல்

**வண்ணங்கள் தெளிவில்லாமல் தெரிதல்

**இரட்டை பார்வை

கண்புரைக்கான சிகிச்சை:

தற்பொழுது கண் சம்மந்தபட்ட பாதிப்புகளுக்கு பல நவீன சிகிச்சைகள் செய்யப்படுகிறது.இந்த அறுவை சிகிச்சை மூலம் கண்களில் உள்ள கண்புரையை எளிதில் அகற்றிவிடலாம்.

கண்புரையால் பாதிக்கப்பட்ட லென்ஸை அகற்றிவிட்டு அதற்கு பதில் பஒளிபுகும் புதிய லென்ஸ் பொருத்தப்படும்.கண்களில் வலி தெரியாமல் இருக்க கண்களில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்படும்.உங்கள் கண்களில் படலம் உருவானால் அலட்சியம் கொள்ளாமல் மருத்துவரை அணுகி உரிய மருத்துவம் காண்பது நல்லது.