நம் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்பட காரணம் நாம் மட்டுமே.நாம் செய்யும் சிறு தவறுகள் நம் சிறுநீரகத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாழாக்கிவிடும்.
சிறுநீரக ஆரோக்கியத்தை பாழாக்கும் பழக்கங்கள்:
1)சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைக்கும் பழக்கம் இருந்தால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.
2)உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் பருகவில்லை என்றால் நிச்சயம் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.
3)அதிக உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.பாக்கட்டில் அடைக்கப்பட்ட உப்பு நிறைந்த தின்பண்டங்களை அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.அதேபோல் உப்பு நிறைந்த உணவுகள் இரத்த அழுத்த பாதிப்பை அதிகரித்துவிடும்.
4)யூரிக் அமில அளவு உடலில் அதிகமானால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.
5)அதிக வலி நிவாரணி மாத்திரை அல்லது மருந்துகளை சாப்பிட்டால் சிறுநீரக ஆரோக்கியம் மோசமாகிவிடும்.
6)உடல் உழைப்பு இல்லாத சோம்பல் வாழ்க்கை முறையை பின்பற்றினால் சிறுநீரக ஆரோக்கியம் மோசமாகும்.
சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வீட்டு வைத்தியங்கள்:-
**வாழைத்தண்டு
**சீரகம்
**எலுமிச்சை சாறு
**தண்ணீர்
வாழைத்தண்டு எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு நறுக்கிய வாழைத்தண்டை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி சீரகத்தை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த வாழைத்தண்டு சூப் நன்றாக கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.பிறகு இந்த சூப்பை கிளாஸிற்கு வடிகட்டி எலுமிச்சை சாறை பிழிந்து கொள்ள வேண்டும்.இந்த சூப்பை பருகி வந்தால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படும்.