எச்சரிக்கை!! உங்கள் கிட்னி பெய்லியர் ஆகப் போவதை உணர்த்தும் பொதுவான அறிகுறிகள் இவை!!

Photo of author

By Rupa

உடலில் இருக்கின்ற தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் சிறுநீரகம் சரியாக செயல்படாவிட்டால் பல வித பாதிப்புகள் ஏற்படத் தொடங்கிவிடும்.ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை பழக்கத்தால் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

முன்பெல்லாம் வயதானவர்கள் மட்டும் அனுபவித்த இந்நோய் தற்பொழுது சிறு வயதினரையும் பாதிக்க தொடங்கிவிட்டது.சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் சிறுநீரக கல்,சிறுநீர்ப்பை வீக்கம்,சிறுநீர் வெளியேறுவதில் சிரமம்,சிறுநீரக தொற்று உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக் கூடும்.

ஒருவருக்கு சிறுநீரக நோய் வருவதற்கான முக்கிய அறிகுறிகள் என்ன என்பது குறித்து இங்கு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

1)சிறுநீரகம் தொடர்பான பாதிப்பு இருப்பவர்களுக்கு அடிக்கடி வாந்தி மற்றும் குமட்டல் உணர்வு ஏற்படும்.

2)தூக்கமின்மை பிரச்சனை தொடர்ந்தால் அது சிறுநீரக நோய்க்கான அறிகுறிகளாக இருக்கக்கூடும்.

3)அதிக நுரையுடன் சிறுநீர் கழித்தல்,சிறுநீரில் துர்நாற்றம் வீசுதல் போன்றவை சிறுநீரக தொற்றுக்கான அறிகுறிகளாகும்.

4)சிறுநீரக நோய் இருந்தால் பசியின்மை ஏற்படும்.

5)உடலில் ஆங்காங்கே அரிப்பு,எரிச்சல் சிறுநீரக நோய்க்கான அறிகுறிகளாகும்.

6)கால் வீக்கம்,முதுகு வலி,அடி வயிற்றுப்பகுதியில் வலி உள்ளிட்டவை சிறுநீரக தொற்றுக்கான அறிகுறிகளாகும்.

7)திடீர் உடல் எடை குறைவு,அதிகப்படியான உடல் சோர்வு போன்றவையும் சிறுநீரக தொற்றுக்கான அறிகுறிகளாகும்.

சிறுநீரக தொற்று ஏற்படாமல் இருக்க உடலுக்கு தேவையான தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம்.நீர்ச்சத்து நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை அவசியம் உட்கொள்ள வேண்டும்.