எச்சரிக்கை! இவர்கள் மறந்தும் கூட கத்திரிக்காயை சாப்பிடக்கூடாது!!
அனைவரின் வீட்டிலும் வாரத்திற்கு ஒரு முறையாவது சமையலில் இடம் பிடித்து விடும் ஒரு காய்தான் கத்தரிக்காய். எளிமையான முறையில் சமைக்க கூடியது என்பதால் ஏராளமான இல்லத்தரசிகளின் விருப்ப பட்டியலில் ஒன்றாக இருக்கிறது. கத்திரிக்காயை சாம்பார்,புளி குழம்பு, பொரியல்,கிரேவி, தொக்கு, என பலவிதங்களில் சமைக்கலாம். கத்திரிக்காயில் ஏராளமான சத்துக்கள் இருந்தாலும் சில தீமைகளும் உள்ளன.
கத்திரிக்காயை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? யாரெல்லாம் சாப்பிடலாம்? அதில் உள்ள நன்மைகள் மற்றும் அதில் உள்ள தீமைகள் என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கத்திரிக்காயில் வைட்டமின் ஏ, பி 1, பி2, சி, கால்சியம், மாங்கனிசு, பொட்டாசியம், இரும்புச்சத்து நார்ச்சத்து, தாமிரம் உள்ளிட்ட 11 வகையான சத்துக்கள் உள்ளன.
கத்திரிக்காயை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:
1. மாதவிடாய் நாட்களில் அதிகளவு உதிரப்போக்கு உள்ள பெண்கள் கத்திரிக்காயை சாப்பிடக்கூடாது. ஏனெனில் கத்தரிக்காய் சாப்பிடுவதால் மாதவிடாயின் போது உதிரப்போக்கை அதிகரிக்கச் செய்யும்.
2. அளவுக்கு அதிகமான கத்திரிக்காயை எடுத்துக் கொள்வதால் நெஞ்சு எரிச்சல், வாயு தொல்லை, செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
3. கருவுற்ற பெண்கள் கத்திரிக்காயை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் கத்தரிக்காய்க்கு இயல்பாகவே கருச்சிதைவை ஏற்படுத்தும் பண்பு உண்டு. எனவே அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
4. கத்திரிக்காயை அதிகளவு சாப்பிடுவதால் மலச்சிக்கல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஏனெனில் இதில் பொட்டாசியம் மற்றும் போலிக் அமிலம் உள்ளது. அதிகமாக சாப்பிடுவதால் இவை வயிற்று பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
5. இதில் அதிக அளவு ஆக்சலேட் இருப்பதால் சிறுநீரகப் பிரச்சனை மற்றும் சிறுநீரக கல் ஏற்படக்கூடும்.
கத்திரிக்காயை சாப்பிட வேண்டியவர்கள்:
1. நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள்.
2. மண்ணீரல் வீக்கம் உள்ளவர்கள்.
3. ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்கள்.
4. சர்க்கரை நோய் உள்ளவர்கள்.
5. மூலநோய் உள்ளவர்கள்.
கத்திரிக்காயை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது:
1. கருவுற்ற பெண்கள்.
2. குறைந்த ரத்த அழுத்தம் உடையவர்கள்.
3. செரிமான பிரச்சனை உடையவர்கள்.
இவர்கள் மருத்துவ ஆலோசனையின் படி கத்திரிக்காயை சாப்பிடுவது நல்லது.