எச்சரிக்கை!! இந்த வியாதி வந்துவிடும்.. NIGHT SHIFT பார்ப்பவர்கள் வேலை முடிந்ததும் கட்டாயம் இதை செய்ய வேண்டும்!!
இன்றைய கால கட்டத்தில் நாம் ஓர் இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.வாழ்க்கைக்கு பணம் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டதால் அதை சம்பாதிக்க காலில் சக்கரம் காட்டியது போன்று உழைக்கின்றோம்.எவ்வளவு நேரம் உழைத்தாலும் உடலுக்கு தேவையான ஓய்வு கிடைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஆனால் இங்கு உணவு,உறக்கத்தை மறந்து பலரும் பலரும் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.பகல் நேர உழைப்பு உடல் ஆரோக்கியத்தை பாதிக்காது.ஆனால் இரவு நேரத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பல வித உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிவோர் நைட் ஷிப்ட் பார்க்கின்றனர்.ஆனால் இது பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.நைட் ஷிப்ட் பார்ப்பவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து தூக்கமின்மை,ஹார்மோன் மாற்றம்,மலச்சிக்கல்,செரிமானக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.
நைட் ஷிப்ட் முடிந்து வீட்டிற்கு வந்ததும் தலையில் நல்லெண்ணெய் அப்ளை செய்து குளித்தால் உடல் சூடு தணியும்.இரவு நேரத்தில் உடல் சூடு அதிகமாகும்.அது மட்டுமின்றி வாயுத் தொல்லை பிரச்சனை ஏற்படும்.இதனால் நல்லெண்ணெய் குளியல் போட்டு இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
சித்த மருத்துவத்தில் நான்கு வாரங்களுக்கு ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் போட வேண்டுமென்று சொல்லப்படுகிறது.உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் கால் வரை நல்லெண்ணெய் அப்ளை செய்து தலைக்கு குளித்தால் உடல் சூடு தணியும்.
நைட் ஷிப்ட் பார்ப்பவர்கள் டீ,காபி அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.இரவு நேரத்தில் குடல் எரிச்சல் அதிகமாக இருக்கும் என்பதினால் நைட் ஷிப்ட் முடிந்து வந்ததும் இளநீர் குடித்து எரிச்சலை தணித்து கொள்ள வேண்டும்.
நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் புரதம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.இரவு நேரத்தில் வயிறு முட்ட சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.நைட் ஷிப்ட் முடிந்து வந்த உடன் நல்லெண்ணெய் குளியல் போட்டுவிட்டு நிம்மதியான உறக்கத்தை அனுபவிக்க வேண்டும்.