எச்சரிக்கை.. டூத் பிரஸை பாத்ரூமில் வைத்து பயன்படுத்தும் பழக்கம் இருப்பவர்கள் இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By Divya

எச்சரிக்கை.. டூத் பிரஸை பாத்ரூமில் வைத்து பயன்படுத்தும் பழக்கம் இருப்பவர்கள் இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Divya

நம் பற்களை சுத்தம் செய்ய பிரஸ் பயன்படுத்துகின்றோம்.வாய் சுகாதாரத்தில் அக்கறை கொள்ளும் நாம் பல் துலக்க பயன்படுத்தும் பிரஷை முறையாக பராமரிக்க தவறுகின்றோம்.பல் துலக்கிய பிறகு சிலர் டூத் பிரஸை பாத்ரூமில் வைப்பார்கள்.சிலர் வாஷ் பேஷன் பக்கத்தில் வைப்பார்கள்.இப்படி பிரஷை வைத்தால் பாக்டீரியாக்கள் பிரஸில் நுழைந்துவிடும்.

சுகாதாரம் இல்லாத பிரஸை பயன்படுத்தினால் உடலுக்குள் பாக்டீரியா எளிதில் நுழைந்துவிடும்.சுகாதாரம் இல்லாத பிரஸை பயன்படுத்தும் பொழுது வாய்வழி சுகாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.நம் பாத்ரூமில் பல் துலக்கும் பிரஸ் வைத்தால் அனைத்துவித பாக்டீரியாக்களும் நுழைந்துவிடும்.

பாத்ரூமில் பிரஸ் வைக்கும் பொழுது நம் பிரஸின் மேற்பரப்பில் பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கும்.இந்த பிரஸை பயன்படுத்தினால் நமக்கு எளிதில் நோய் தொற்று ஏற்பட்டுவிடும்.பல் துலக்க பயன்படுத்தும் பிரஸை ஈரப்பதத்துடன் வைத்தால் கிருமிகள்,பாக்டீரியாக்கள் எளிதில் அதில் பரவிவிடும்.அதேபோல் பல் துலக்கிய பிறகு பிரஸை மூடி வைக்க கூடாது.இதனால் பாக்டீரியாக்கள் எளிதில் பிரஸில் நுழைந்துவிடும்.

கழிவறையில் பல் துலக்கும் பிரஸ் வைத்தால் அதில் மாசுபாடு ஏற்படும்.அதேபோல் குடும்ப உறுப்பினர்களின் பிரஸை ஒரே இடத்தில் வைத்தால் ஒரு பிரஸில் இருந்து மற்றொரு பிரஸ்க்கு பாக்டீரியா கிருமிகள் எளிதில் பரவி நோய்த்தொற்றுகள் பரவக்கூடும்.

பாத்ரூமை சுத்தம் செய்யும் பொழுது கிருமி தொற்றுகள் மற்ற இடங்களுக்கு எளிதில் பரவும்.எனவே பாத்ரூமில் பிரஸ் வைத்து பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.அதேபோல் அதிக சூரிய ஒளி படும் இடத்தில் பிரஸ் வைப்பதை தவிர்க்க வேண்டும்.சூரிய வெப்பத்தால் பிரஸின் செயல்திறன் குறைந்துவிடும்.இதனால் பல் துலக்குவதில் சிரமம் ஏற்படும்.