பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை! தமிழக அரசின் அடுத்த அதிரடி!

Photo of author

By Rupa

பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை! தமிழக அரசின் அடுத்த அதிரடி!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சென்ற மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.அந்தவகையில் விவசாயிகளுக்கென்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்தது என்பது இதுவே முதல் முறையாகும்.இதனால் விவசாயிகள் பலர் பலனடைந்தனர்.அந்தவகையில் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் அரசு பள்ளி மாணவர்கள் பொறியியல் படிப்பிற்கு 7.5% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பரிந்துரை செய்திருந்தனர்.அவர் பரிந்துரையின் பேரில் 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்படிப்புகள்  படிப்பதற்கான முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறி அறவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

7.5 சதவீதம் ஒதுக்கீடு படி அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் சேர்க்கைக்கான ஆணையை அரசு வெளியிட்டனர்.இந்த ஆணையானது கடந்த 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது.அந்த ஆணையில் தமிழக அரசு கூறுவது,இந்த 7.5 சதவீதம் அடிப்படையில் பி.இ சேரும் மாணவர்களுக்கு அதன் கல்வி கட்டணம்,விடுதி கட்டணம்,கலந்தாய்வு கட்டணம் என அனைத்தையும் அரசே ஏற்கும் என கூறினர்.இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.

அரசு இவ்வாறு கூறியும் தமிழகத்தில் இந்த 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடம் சில கல்லூரிகள் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்த வண்ணமாகவே இருந்தது.அதனால் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடம் பொறியியல் கல்லூரிகள் எந்தவித கட்டணத்தையும் வசூலிக்க கூடாது என்று தொழில்நுட்ப கல்வி இயக்கம் கூறியுள்ளது.மீறி வசூலிக்க நேர்ந்தால் தக்க தண்டனை வழங்கப்படும் என எச்சரித்துள்ளனர்.அதுமட்டுமின்றி அரசு மற்றும் தனியார் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் இதுகுறித்து கல்வி இயக்கம் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தனியார் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.