அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு எச்சரிக்கை!! இதை மீறினால் அடிப்படை சம்பளம் குறைப்பு மற்றும் பணியிடை நீக்கம்!!
அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை தமிழக அரசு எச்சரித்துள்ளது. பயணங்களின் போது அரசு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் குடித்துவிட்டு பணிபுரிவதாக பல புகார்கள் வந்துள்ளது. அவ்வாறு வந்த புகாரின் பேரில் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இனிவரும் நாட்களில் கழக ஓட்டுநர்கள் மற்றும் ஓட்டுநர் உடன் நடத்துனர்கள் மது அருந்திய நிலையில் பணிபுரிய கூடாது. அவ்வாறு பணி புரிந்தால் அது சட்டப்படி குற்றம்.
மேலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இவ்வாறு மது அருந்திவிட்டு பணிபுரிபவர்களால் பல பயணிகள் அரசு பேருந்துகளில் பயணிக்காமல் நம்பிக்கையை இழந்து வேறொரு பேருந்துகளில் பயணிக்க உள்ளனர். இதை எல்லாம் தவிர்க்க, அரசு கூறும் விதிமுறைகளை ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். எனவே ஓட்டுநர்கள் மற்றும் அந்த ஓட்டுனர்களுடன் பணியில் இருக்கும் நடத்துனர்கள் மது அருந்த கூடாது. அவ்வாறு வேலை நேரத்தில் மது அருந்தி இருந்தால் அவர்களின் அடிப்படை சம்பளம் குறைக்கப்படும், உச்சகட்டமாக அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என்று தெரிவித்துள்ளனர்.