District News

பெட்டி கடைகளுக்கு எச்சரிக்கை! அரசு தடை செய்த பொருளை விற்றால் இதுதான் தண்டனை!

பெட்டி கடைகளுக்கு எச்சரிக்கை! அரசு தடை செய்த பொருளை விற்றால் இதுதான் தண்டனை!

தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு போக்குவரத்து பணிமனை கழகம் அருகே உள்ள பெட்டிக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா புகையிலை போன்றவை பல நாட்களாக சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து இன்று நேரில் சென்று உணவுப் பாதுகாப்பு அலுவலர் மற்றும் காவல் ஆய்வாளர் மீனாட்சி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்ட போது விற்பனைக்காக வைத்திருந்த அரசு தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இதனைக் கண்ட அதிகாரிகள் சற்று தப்பித்து போனார்கள் .இதனையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி அந்த கடையின் உரிமையாளர் மீது 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார். இதையடுத்து அப்பகுதில் சற்று பரபரப்பாக காணப்பட்டது.

Leave a Comment