தமிழக மக்களுக்கு எச்சரிக்கை!! இந்த 4 மாவட்டங்களில் கனமழை!!

Photo of author

By Amutha

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை!! இந்த 4 மாவட்டங்களில் கனமழை!!

Amutha

Warning to the people of Tamil Nadu!! Heavy rain in these 4 districts!!

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை!! இந்த 4 மாவட்டங்களில் கனமழை!!

தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தற்போது தமிழக முழுவதுமே மழை பரவலாக விட்டுவிட்டு பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இந்த மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது பற்றி வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இன்று (08.09.2023) மற்றும் 09.09.2023 ஆகிய இரண்டு நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதுபோல கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

10.09.2023 – தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால், பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கோவை மாவட்டத்தில் மலைப்பகுதிகள், மற்றும் நீலகிரி மாவட்டத்தில்   கனமழையும் பெய்ய வாய்ப்புகள் உள்ளன.

11.09.2023 – 14.09.2023 தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை இடி,மின்னலுடன் பெய்யக்கூடும்.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை அறிக்கை தெரிவிக்கின்றது.

அப்போது அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக் கூடும்.

இவ்வாறு சென்னை வானிலை மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.