பொதுமக்களுக்கு எச்சரிக்கை உணவில் இந்த பொருள் கூட கிடக்கலாம்!! ஓட்டலில் வாங்கிய சாப்பாடு பார்சலில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த நபர்!!
மதிய உணவு சாப்பிடுவதற்காக ஓட்டலில் உணவு பார்சல் வாங்கி வந்த நபர் அதில் கிடந்த பொருளை கண்டு அதிர்ச்சி அடைந்து உணவு பாதுகாப்பு துறையில் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் மதுரை மாவட்டத்தில் நடைப் பெற்றுள்ளது.
மதுரையில் உள்ள சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர் மதிய உணவிற்காக ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள உணவு விடுதியில் பார்சல் வாங்கியுள்ளார். பசியில் இருந்த அவர் சாப்பாடு பார்சலை பிரித்த போது அதில் பாதியளவு உடைந்த பிளேடு துண்டு கிடந்துள்ளது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அவர் பார்சல் வாங்கிய உணவகத்திற்கு நேரில் சென்று காட்டி விளக்கம் கேட்டுள்ளார்.
ஆனால் சம்பந்தப்பட்ட ஓட்டல் ஊழியர்கள் முறையான விளக்கம் தராததால் அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நபர் உணவு பாதுகாப்புத் துறையில் புகார் தெரிவித்தார். இதையடுத்து மதுரை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று பார்சல் சாப்பாட்டை சோதனை செய்ததோடு மட்டுமில்லாமல் அங்கு உணவகத்திலும் ஆய்வு செய்தனர். மேலும் அந்த உணவகத்திற்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டு உரிய விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
சோதனை முடிவில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், உணவில் பிளேடு கிடந்ததாக புகார் வந்ததையடுத்து ஓட்டலுக்கு நேரில் சென்று சோதனை நடத்தினோம். அங்கிருந்த ஊழியர்கள் உரிய பராமரிப்பின்றி இருந்தனர். மேலும் சாப்பாட்டில் பிளேடு கிடந்ததற்கு உரிய விளக்கம் கேட்கப்பட்டது.
இதன் காரணமாக அந்த உணவகத்திற்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல் , அங்குள்ள குறைகளை 14 நாட்களுக்குள் சரிசெய்யுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். குறைகளை சரி செய்யாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினர். உணவில் பிளேடு கிடந்தது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.