எச்சரிக்கை! போக்குவரத்து போராட்டம் தீவிரமடையுமா? பொதுமக்கள் பெரும் அவதி!
புதுச்சேரியில் சாலை போக்குவரத்து கழகத்தில் பேருந்து ஊழியர்கள் இடையே சில நாட்களாக தகராறு நேர்ந்தது. திடீரென்று ஒருநாள் இருவருக்கும் இடையே தகராறு காரணமாக ஊழியர்களை தாக்கினர். தனியார் பேருந்து ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு இடையே பெரும் தகராறு நேர்ந்தது இதனால் சிலரையும் தாக்கினர். இதன் காரணமாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் மூன்று நாட்களுக்கு வேலை நிறுத்தம் செய்ய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சாலைப் போக்குவரத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பேருந்து நிறுத்தத்தின் காரணமாக பொதுமக்கள் அனைவரும் பெரும் அவதிப்படுகிறார்கள்.
சாலைப் போக்குவரத்து கழகத்தில் 500 நிரந்தர ஊழியர்களும் 570 ஒப்பந்த ஊழியர்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அரசு பேருந்துகளில் 5 ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்கியதன் காரணமாக பேருந்து நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் கடந்த 25ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.இத்துடன் இன்றும் 3 வது நாளாக வேலை நிறுத்தம் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதனால் அனைத்து பேருந்து நிலையம் பின்புறம் மட்டும் பணிமனை முன்பு பேருந்து நிறுத்தப்பட்டுள்ளன. இதை அடுத்து வேலை நிறுத்த போராட்டத்தை ஈடுபடுவதன் காரணமாக சென்னை,திருப்பதி, பெங்களூர், காரைக்கால் மட்டும் கிராமங்களிலும் எந்த பேருந்தும் இயக்காத நிலையில் உள்ளது. இதனால் புதுச்சேரி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் போக்குவரத்து கழகத்தில் வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக ரூபாய் 30 லட்சம் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இந்த நிலையில் முன்னறிவிப்பு இல்லாமல் போராட்டத்தை நடத்தியதால் ஒப்பந்த ஊழியர்களான 12 பேரை போக்குவரத்துக்கழக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து ஒப்பந்த தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்கப்பட்ட 12 ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. இதனால் போராட்டம் நடத்தும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நிர்வாகம் தயாராக உள்ளது. போக்குவரத்து கழகத்தில் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் பிடிக்கப்படும் என்று நிர்வாகம் கூறியது.