Breaking News, Health Tips

WARTS: இதை செய்தால் உடலில் ஒட்டி கிடக்கும் மருக்கள் ஒரே நாளில் கொட்டிவிடும்!!

Photo of author

By Divya

WARTS: இதை செய்தால் உடலில் ஒட்டி கிடக்கும் மருக்கள் ஒரே நாளில் கொட்டிவிடும்!!

உங்களில் பலருக்கு உடலில் மருக்கள் படர்ந்து கிடக்கும்.கழுத்து,அக்குள்,தொடை,இடுப்பு,முகம் உள்ளிட்ட பகுதிகளில் தான் மருக்கள் வளரும்.இவை உங்கள் மேனி அழகை முழுமையாக கெடுத்து விடும்.குறிப்பாக ஆண்களை விட பெண்கள் தான் மருக்கள் பிரச்சனையால் அவதியடைந்து வருகின்றனர்.

எனவே இந்த மருக்களை வலியின்றி ரொம்ப சுலபமாக நீக்குவது குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது.

தீர்வு 01:

1)விளக்கெண்ணெய்
2)ஆப்ப சோடா

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி விளக்கண்ணெய் மற்றும் 1/4 தேக்கரண்டி ஆப்ப சோடா சேர்த்து நன்கு கலந்து விடவும்.

இதை உடலில் இருக்கின்ற மருக்கள் மீது தடவவும்.பின்னர் மருக்கள் மீது பேண்டேஜ் ஒட்டவும்.இதை இரவு செய்தால் மறுநாள் காலையில் அந்த பேண்டேஜை எடுக்கவும்.இவ்வாறு செய்தால் உள்ள ஒட்டி கிடந்த மருக்கள் அனைத்தும் உதிர்ந்து விடும்.

தீர்வு 02:

1)பூண்டு
2)எலுமிச்சை
3)ஆப்ப சோடா
4)சுண்ணாம்பு

ஒரு உரலில் 2 பல் பூண்டு போட்டு இடித்துக் கொள்ளவும்.பின்னர் ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு,இடித்த பூண்டு,1/4 தேக்கரண்டிக்கும் குறைவாக ஆப்ப சோடா மற்றும் 1/4 தேக்கரண்டி சுண்ணாம்பு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.

இந்த பேஸ்டை உடலில் இருக்கின்ற மருக்கள் மீது தடவினால் ஒரே நாளில் அவை உதிர்ந்து விடும்.

தீர்வு 03:

1)வாழைபழத் தோல்
2)கற்றாழை ஜெல்

ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை தனியாக பிரித்துக் கொள்ளவும்.இதை ஒரு கிண்ணத்தில் போட்டு 2 அல்லது 3 முறை அலசி சுத்தம் செய்யவும்.

அதன் பின்னர் ஒரு வாழைப்பழத்தின் தோலை மிக்ஸி ஜாரில் போடவும்.பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள கற்றாழை ஜெல்லை போட்டு மைய்ய அரைக்கவும்.

இந்த பேஸ்டை மருக்கள் மீது பூசி 20 நிமிடங்கள் கழித்து குளித்தால் அவை ஒரே நாளில் உதிர்ந்து விடும்.

சாப்பிட்டவுடனே வயிறு எரிச்சல் மலம் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறதா? இதை செய்தால் உடனடி தீர்வு கிடைக்கும்!!

காமாட்சி விளக்கு ஏற்றும் போது இதை செய்தால் பெரிய அபசகுனம்!! மறந்தும் இதை செய்துவிடாதீர்கள்!!