1010 ஆண்டுகளுக்கு முன்னரே மழை நீர் சேகரிப்பு திட்டத்தை பயன்படுத்திய மன்னர் ராஜராஜ சோழன்
தமிழகத்தின் தலைநகரம் முதல் குக்கிராமங்கள் வரை குடிநீர் தட் டுப்பாட்டை போக்க மழைநீர் சேக ரிப்பு திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் எனக் கூறிவரும் நிலையில், 1010 ஆண்டு களுக்கு முன்பாகவே மழை நீரை குளத்தில் சேகரித்து பாசனத் துக்கும், மக்களின் குடிநீர் தேவைக் கும் பயன்படுத்தியுள்ளனர்.
மழை நீரைச் சேகரிக்கும் வித மாக, பரந்து விரிந்துள்ள தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே சிவகங்கை என்கிற குளத்தை வெட்டி, கோயிலில் இருந்து அந்தக் குளத்துக்கு மழைநீர் செல்லும் வகையில் சாலவம் (நீர்ப் போக்கும் வழி) என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மழைநீரை சேமித் துள்ளார் சோழ மன்னர் ராஜராஜ சோழன்.
இந்த தொழில்நுட்பத்தை ராஜராஜ சோழனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த மராட்டிய வம் சத்தின் சரபோஜி மன்னரும் கையாண்டுள்ளார் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, வரலாற்று ஆய்வா ளர் மணி.மாறன் கூறியதாவது: தஞ்சாவூரை ஆண்ட ராஜராஜ சோழன் தனது ஆளுகைக்கு உட்பட்ட நிலங்களை வளப்படுத்த குளங்கள், ஏரிகளை வெட்டினார். அதேநேரம் மக்களின் குடிநீர்த் தேவைக்காக என பெரிய கோயில் அருகே சிவகங்கை குளத்தை வெட்டினார்.
மேலும், பெரிய கோயிலில் மழையின்போது கிடைக்கும் தண் ணீரை வீணாக்காமல் சேமித்துப் பயன்படுத்தும் விதமாக கோயிலின் வடக்கு புறத்தில் நீர் போக்கும் வழி எனப்படும் சாலவம் என்ற வடிகால் போன்ற அமைப்பை கருங்கற்களைக் கொண்டு அமைத்தார். இதில் தண்ணீரைத் தடுத்து அனுப்பும் முறை உள்ளது.
முதலில் பெய்யும் மழைநீர் அழுக்காக இருக்கும் என்பதால் அந்த நீர் நந்தவனத்துக்குச் செல் லும்விதமாக ஒரு சாலவத்தையும், சிறிது நேரம் கழித்துக் கிடைக்கும் சற்று தெளிவான நீரை, முதல் சாலவத்தை அடைத்துவிட்டு, சிவ கங்கை குளத்துக்கு கொண்டு சேர்க்கும் விதமாக 2-வது சாலவ மும் அமைத்தார் ராஜராஜ சோழன்.
சிவகங்கை குளம் நிரம்பிய பிறகு, அங்கிருந்து அய்யன் குளம், சாமந்தான் குளங்களுக்கும் தண்ணீர் செல்லும்விதமாக நீர்வழிப் பாதைகள் அமைக்கப்பட்டு, அங் கும் மழைநீர் சேமித்து வைக்கப் பட்டுள்ளது.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் அமைக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் நல்ல பயனைக் கொடுத்ததால், அதன் பிறகு ராஜராஜ சோழன் கட்டிய அனைத்து கோயில்களிலும் இந்த மழைநீர் சேகரிப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பின்னர் தஞ்சாவூரை ஆண்ட 2-ம் சரபோஜி மன்னர், ஜல சூத்திரம் என்கிற அமைப்பை உருவாக்கி, கோட்டையில் உள்ள கிணறுகள், நகரப் பகுதிகளில் உள்ள வீடுகள் ஆகியவற்றுக்கு குடிநீர் செல்லும் விதமாக ராஜராஜ சோழனின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தினார். இத்தகைய குடிநீர் குழாய்களை யானை மிதித்தாலும் சேதமடையாத வகையில் சுண்ணாம்புக் கலவை, சுடு மண் போன்றவற்றை கொண்டு அமைத்தார்.
இந்த வகையில், மழைநீரைச் சேமிப்பதற்காக தஞ்சாவூர் நகரில் மட்டும் 50 குளங்களை மன்னர் கள் பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனால், தற்போது அந்தக் குளங் களில் பெரும்பாலானவை ஆங்கி லேயர் காலம் வரை பராமரிக் கப்பட்டு அதன்பின் குப்பை மேடாகி ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.
ஆனால் 1,010 ஆண்டுகளைக் கடந்து இன்றளவும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெய்யும் மழைநீர், சாலவம் வழியாகத்தான் சிவகங்கை குளத்துக்கு செல்கிறது என்றார்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.