நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு!!  பரிசல்  இயக்க தடைவிதித்த மாவட்ட நிர்வாகம்!! 

Photo of author

By Amutha

நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு!!  பரிசல்  இயக்க தடைவிதித்த மாவட்ட நிர்வாகம்!! 

Amutha

Water flow continues to increase!! The district administration has banned operation in Parisal!!

நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு!!  பரிசல்  இயக்க தடைவிதித்த மாவட்ட நிர்வாகம்!! 

ஒகேனக்கல் அருவிகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக் கொண்டிருப்பதால் அங்கு பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாகும். இங்கு காவிரி தமிழ்நாட்டில் தொடங்கும் எல்லை என்பதால் இங்குள்ள அருவிகளில் குளித்து மகிழ தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை புரிகின்றனர். அவர்கள் அங்குள்ள அருவிகளில் குளித்தும் பரிசலில் பயணம் செய்தும்  மகிழ்வர்.

இந்த சூழ்நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கி உள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழையானது பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக பகுதிகளில் இருந்து ஏராளமாக தண்ணீரானது திறந்து விடப் படுவது அதிகரித்துள்ளது. ஏற்கனவே அங்கு கனமழை பெய்து வருவதால் சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் காவேரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் என தெரிகிறது.

இதையடுத்து ஒகேனக்கல் அருவிகளில் நீரின் வரத்தானது   7 ஆயிரம் கன அடியாக  இருந்து   தற்போது 12 ஆயிரம் அடியாக உயர்ந்துள்ளதால் ஒகேனக்கல்அருவிகளில் பரிசல் சவாரி மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தற்போது தடை விதித்து உள்ளது.