அபாய அளவை தாண்டிய நீர்மட்டம்: வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்!
வட மாநிலங்களில் மேல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாத பெய்து வரும் மழையினால் யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. யமுனை ஆற்றின் தாழ்வாக உள்ள பகுதிகளில் நீர் புகுந்ததால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தற்போது பெய்து வரும் கனமழையால் இதுவரை இல்லாத அளவிற்கு ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவான 205.33 மீட்டரை தாண்டியுள்ளது.
ஆற்றங்கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளில் நீர் புகுந்துள்ளது. அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு மேடான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.