பழைய 500 மற்றும் 1000 நோட்டுகள் மாற்றாம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை! உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

0
204

பழைய 500 மற்றும் 1000 நோட்டுகள் மாற்றாம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை! உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி அன்று இரவு மோடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிவிப்பில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என கூறப்பட்டது.அதற்கு பதிலாக புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது.மேலும் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வாங்கியின் மூலம் அதனை மாற்றி கொள்ளாலாம் எனவும் மத்திய அரசு கால அவகாசம் வழங்கியது

அந்த புதிய நோட்டுகள் அறிமுகம் செய்ததை எதிர்த்து கடந்த 2016ஆண்டு  15ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.இந்த புதிய திட்டத்தின் நோக்கம் நன்மையே என நீதிபதிகள் கூறினார்கள்.மேலும் அரசின் பொருளாதாரக் கொள்கையில் நாங்கள் தலையிட வில்லை எனவும் கூறியுள்ளனர்.இது தொடர்பாக மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு தடை உட்பட இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

இந்த வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான தொடரப்பட்ட  57 ரிட் மனுக்களை இன்று நீதிபதிகள் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்கின்றது.

author avatar
Parthipan K